News September 4, 2025
மீண்டும் முதலிடம் பிடித்த சென்னை IIT

17 பிரிவுகளில் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நாட்டில் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் சென்னை IIT முதலிடம் பிடித்துள்ளது. சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் 2-ம் இடமும், பாரதியார் பல்கலைக்கழகம் 10-வது இடமும் பிடித்துள்ளன. சிறந்த கல்லூரிகள் பட்டியலில் கிருஷ்ணம்மாள் கல்லூரி 9-வது, PSG கல்லூரி 10-வது இடத்தையும் பிடித்தன.
Similar News
News September 4, 2025
BIG BREAKING: அமைச்சர் துரைமுருகனுக்கு பிடிவாரண்ட்

அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக சென்னை சிறப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. வரும் 15-ம் தேதிக்குள் பிடிவாரண்ட் ஆணையை செயல்படுத்த வேண்டும் என TN காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. 2007 – 2009 காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ₹1.40 கோடி சொத்து சேர்த்ததாக 2011-ல் DVAC தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகததால் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
News September 4, 2025
விஜய்யின் அடுத்த அரசியல் நகர்வு

மதுரை மாநாட்டை தொடர்ந்து அரசியலில் தனது அடுத்தக்கட்ட நகர்வை விஜய் தொடங்கவுள்ளார். வரும் 13-ம் தேதி விஜய் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருச்சியில் தொடங்கி ஒரு நாளைக்கு கட்சியின் அமைப்பு ரீதியாக 2 மாவட்டங்களில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை தவெகவினர் செய்து வருகின்றனர். சுற்றுப்பயணத்திற்காக பிரத்யேக வேனும் தயாராக உள்ளது.
News September 4, 2025
சட்டம் அறிவோம்: கணவன் மீது பொய் டவுரி கேஸ் அளித்தால்..

அப்பாவியான பல ஆண்கள் மீதும், பொய்யான வரதட்சணை வழக்குகள் அளிக்கப்படுகிறது. அதை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள முடியாமல், பலரும் அவமானத்தில் கூனி குருகி போகின்றனர். அப்படியான ஆண்களுக்கு BNS Section 255 உதவும். பொய் புகார் என்பது நிரூபிக்கப்பட்டால், புகார் அளித்தவருக்கு 2 முதல் 7 ஆண்டு சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். இது ஆண்களுக்கான நீதியை நிலைநிறுத்தும் வலுவான சட்டமாகும். SHARE IT.