News April 9, 2024
புதிய அறக்கட்டளையை தொடங்கிய சென்னை ஐஐடி

இந்தியாவில் உருவாகும் புதிய தொழில்நுட்பங்களை உலகளவில் கொண்டு சேர்க்க புதிய ஆராய்ச்சி அறக்கட்டளை ஒன்றை சென்னை ஐஐடி தொடங்கியுள்ளது. இந்த அறக்கட்டளையின் சி.இ.ஓ-வாக வணிக மேலாண்மை & தொழில்நுட்ப நிபுணர் திருமலை மாதவநாராயண் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறக்கட்டளை இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு சர்வதேச அளவில் தொழில்நுட்பம் & நிதி போன்ற வணிக ரீதியிலான உதவிகளைப் பெற்று தரும் எனக் கூறப்படுகிறது.
Similar News
News March 31, 2026
கேரளாவில் மகளிருக்கு ₹2,500 கூப்பன்.. பாஜக வாக்குறுதி

கேரளாவில் ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு ₹2,500 மதிப்பிலான மாதாந்தர மளிகை மற்றும் மருந்து கூப்பன் வழங்கப்படும் என பாஜக தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளது. பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ஒணம், கிறிஸ்துமஸ் விழாக்களில் ஏழைகளுக்கு இலவசமாக 2 சிலிண்டர்கள் வழங்கப்படும், AIMS ஹாஸ்பிடல், வீடுகளும் மாதம் தோறும் 20,000 லிட்டர் இலவச தண்ணீர் உள்ளிட்ட வாக்குறுதிகள் உள்ளன.
News March 31, 2026
AI டேட்டா சென்டர்கள்… வெப்பம் உயரும் அபாயம்

AI டேட்டா சென்டர்கள் அதனை சுற்றியுள்ள பகுதிகளை வெப்பத் தீவுகளாக மாற்றுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெப்பம் 10 கி.மீ வரை பரவுவதாகவும், இதனால் 34 கோடி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் AI டேட்டா சென்டர்கள் வேகமாக அமைக்கப்படும் நிலையில், இந்த ‘வெப்பத் தீவு’ பிரச்சனை கவலையை ஏற்படுத்தியுள்ளது.
News March 31, 2026
நாளை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

பங்குனி உத்திர விழாவையொட்டி, நாளை (ஏப்.1) தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அன்றைய தினம் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் செயல்படாது. அதேபோல், நார்த்தாமலை தேர் திருவிழாவை முன்னிட்டு ஏப்.6-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும். அதேநேரம், முழு ஆண்டுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது.


