News August 24, 2024
மனசு ரொம்ப கவலையா இருக்கா.. இதை சாப்பிடுங்க

ஒருகாலத்தில் Stress என்பதற்கு பலருக்கும் அர்த்தம் தெரியாது. ஆனால் இன்றோ இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுசுகளே, “ஒரே ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு ப்ரோ” என சொல்லும் அளவுக்கு வாழ்வியல் முறை மாறிவிட்டது. வாழைப்பழங்களும், மாதுளைப் பழங்களும் creatine, dopamine ஆகிய மகிழ்ச்சி ஹார்மோன்களை அதிகமாக சுரக்கச் செய்கிறது. மாதுளை ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தாலே மனம் குதூகலமாக மாறும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
Similar News
News December 5, 2025
DRDO-வில் 763 பணியிடங்கள்.. Apply பண்ணுங்க

DRDO-வின் பணியாளர் திறன் மேலாண்மை மையம் 763 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் 561 senior technical assistant-B, 203 technician-A பணியிடங்கள் அடங்கும். விண்ணப்பதாரர்கள் 18 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இதற்கு வரும் டிச.9-ம் தேதி முதல் www.drdo.gov.in என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் நீங்கள் விண்ணப்பிக்கலாம். SHARE IT
News December 5, 2025
550 விமானங்கள் ரத்து.. மன்னிப்பு கேட்ட இண்டிகோ

புதிய விமானப் பணிநேர வரம்பு விதிகளை, பின்பற்றிட இண்டிகோவிடம் போதிய விமானிகள் இல்லை என கூறப்படுகிறது. இதனால், நேற்று 550 விமானங்களின் சேவையை இண்டிகோ ரத்து செய்தது. இதற்காக விமானப் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுள்ள இண்டிகோ, இப்பிரச்னையை சரிசெய்வதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது. மேலும், பிப்.10 வரை விதிகளில் இருந்து தளர்வு கோர இண்டிகோ முடிவெடுத்துள்ளது.
News December 5, 2025
டிசம்பர் 5: வரலாற்றில் இன்று

*1896–சென்னை கன்னிமாரா நூலகத்தில் பொதுமக்களுக்கு அனுமதி *1905–அரசியல்வாதி ஷேக் அப்துல்லா பிறந்தநாள் *1930–அரசியல்வாதி எஸ்.டி.சோமசுந்தரம் பிறந்தநாள் *1954–எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு நாள் *1960–நடிகை சரிகா பிறந்தநாள் *1980–நடிகர் சுருளி ராஜன் நினைவு நாள் *2006–கொலை வழக்கில் சிபு சோரனுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு *2013–நெல்சன் மண்டேலா நினைவு நாள் *2016–முன்னாள் CM ஜெ.ஜெயலலிதா நினைவு நாள்


