News December 9, 2024
திங்கள்கிழமை சிவனை வணங்கினால்…

16 திங்கட்கிழமை சிவன் – பார்வதியை வழிபாடு செய்தால், மனகஷ்டங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த விரதத்தை மேற்கொள்ள, ஒவ்வொரு திங்கள் காலையில் நீராடி உண்ணாமல் சிவன் பார்வதிக்கு பூஜை செய்யவேண்டும். உணவிற்கு பதிலாக பழச்சாறுகள், பால், பழம் எடுத்து கொண்டு பூஜை செய்யலாம். வில்வ இலைகள், செவ்வரளி மலர்கள், சங்கு பூக்களை படைக்கலாம். நைவேத்தியமாக பழங்கள் இயன்ற பாயாசம், சர்க்கரைப் பொங்கல் படைக்கலாம்.
Similar News
News August 30, 2025
வாக்குகளை திருடி மோடி வெற்றி பெற்றார்: ராகுல் காட்டம்

வாக்கு திருட்டு என்பது அம்பேத்கரின் அரசியலமைப்பின் மீதான தாக்குதல் என ராகுல் காந்தி சாடியுள்ளார். யாரும் அரசியலமைப்பை அழிக்க விடமாட்டோம் எனவும், மோடி வாக்குகளை திருடியே தேர்தலில் வெற்றி பெற்றார் என்றும் அவர் விமர்சித்துள்ளார். ஏழைகள், சிறுபான்மையினர், பெண்கள் உள்ளிட்டோரின் வாக்குகளை பறிக்கும் மோடி, பிறகு அம்பானி அதானியுடன் இணைந்து ரேஷன் மற்றும் இதர சலுகைகளையும் பறிப்பார் என குற்றம்சாட்டியுள்ளார்.
News August 30, 2025
மத்திய அரசுக்கு ₹7,324 கோடி வழங்கிய LIC

லாபப் பங்குத் தொகையாக ₹7,324 கோடியை மத்திய அரசிடம் LIC வழங்கியுள்ளது. அரசிடம் இப்போது LIC-யின் 96.5% பங்குகள் உள்ளன. கடந்த 2022 மே மாதத்தில் பொதுப் பங்கு வெளியீடு முறையில் 3.5% பங்குகள் முதல்முறையாக விற்பனை செய்யப்பட்டன. இதில் மத்திய அரசுக்கு ₹21,000 கோடி கிடைத்தது. மீண்டும் 6.5% LIC பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News August 30, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் 30, ஆவணி 14 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: சப்தமி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை