News May 22, 2024
விசாகத்தில் முருகனை வழிபட்டால் வாழ்வே மாறும்

வைகாசி மாதம் விசாக நட்சத்திர நாளில்தான் முருகப்பெருமான் அவதாரம் செய்ததாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. வைகாசி விசாக நன்னாளான இன்று (மே 22) அதிகாலையில் எழுந்து நீராடி, நாள் முழுவதும் விரதமிருந்து மாலையில் ஆலயம் சென்று வேல்முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து, 6 நெய் விளக்கேற்றி, செவ்வரளி மலர்மாலை சாற்றி, திருப்புகழ் பாடி வணங்கினால் தீராத நோய்களும் கடன் பிரச்னைகளும் நீங்கும் என்பது நம்பிக்கை.
Similar News
News November 21, 2025
இந்தியர்களின் சிந்தனை புனிதமானது: RN ரவி

சுதந்திரத்திற்கு முன்பு, பிரிட்டிஷரின் தலையீட்டால், நம் நாட்டின் கலை மற்றும் கலாசாரம் சார்ந்த கூறுகள் மறைக்கப்பட்டதாக கவர்னர் RN ரவி தெரிவித்துள்ளார். மேற்கத்திய கலாசாரத்தை தவிர்த்து, நம்முடைய பாரம்பரிய கலாசாரத்தை பின்பற்ற வேண்டும் என்றும், ஐரோப்பியர்களை விட இந்தியர்களின் சிந்தனை புனிதம் வாய்ந்தது எனவும் கூறியுள்ளார். நமது கலாசாரம், பண்பாடு 5,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்றும் அவர் தெரிவித்தார்.
News November 21, 2025
தூய்மை பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் உணவு

கோவையில் தூய்மை பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் உணவு கொண்டு வந்த செய்தியை கேட்டதும், இப்படி ஒரு திட்டத்தை செயல்படுத்தவே வேண்டாம் என்றே சுயமரியாதை உள்ள எவருக்கும் தோன்றும் என EPS விமர்சித்துள்ளார். அதேபோல், இவ்வாறு செய்த திமுகவின் அரசின் ஆணவம் அருவருக்கத்தக்கதாக உள்ளதாக நயினார் நாகேந்திரனும் சாடியுள்ளார். தூய்மை பணியாளர்கள் உரிய மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
News November 21, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.21) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.


