News April 13, 2024
ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.42 லட்சம் பரிசு!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வோருக்கு பரிசுத்தொகையை முதல் அமைப்பாக உலக தடகள சம்மேளனம் அறிமுகம் செய்துள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வரும் ஜூலை 26ஆம் தேதி தொடங்கி ஆக.11 வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகிறது. இதில், 48 விதமான தனிநபர் மற்றும் குழுப் போட்டிகளில் தங்கம் வெல்லும் தடகள வீரருக்கு பதக்கத்துடன் 50 ஆயிரம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.41.80 லட்சம்) பரிசாக வழங்கப்படும்.
Similar News
News November 20, 2025
U-19 உலகக் கோப்பை அட்டவணை வெளியீடு

அடுத்த ஆண்டு ஜிம்பாப்வே, நமிபியாவில் நடக்கவுள்ள U-19 ஆடவர் உலகக் கோப்பைக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 16 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் ஜன.15-ம் தேதி தொடங்குகிறது. இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, அமெரிக்கா, வங்கதேசம், நியூசிலாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்தியா தனது முதல் போட்டியில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. புள்ளிகள் அடிப்படையில் சூப்பர் 6 சுற்றுக்கு அணிகள் தகுதிபெறும்.
News November 20, 2025
INDIA கூட்டணி முடிவுக்கு வருகிறதா?

பிஹார் தேர்தல் முடிவுகளின் எதிரொலியாக காங்கிரஸ் தலைமை சில அதிரடி முடிவுகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. வரக்கூடிய தேர்தல்களில் வெற்றி வாய்ப்புள்ள மாநிலங்களில் தனித்து போட்டியிட காங்கிரஸ் முடிவெடுத்துள்ளதாகவும், இதர மாநிலங்களில் தேவைக்கு ஏற்ப தொகுதி பங்கீட்டை உறுதி செய்து, கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் INDIA கூட்டணி முடிவுக்கு வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News November 20, 2025
ரிஷப் பண்ட் கேப்டன்.. சுப்மன் கில் OUT?

கழுத்து வலி காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து சுப்மன் கில் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் கேப்டனாக செயல்படுவார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பேட்டிங் ஆர்டர் பொறுத்தவரை சுப்மன் கில்லுக்கு பதிலாக சாய் சுதர்ஷன் விளையாடவுள்ளார். 2-வது டெஸ்ட் வரும் 22-ம் தேதி கவுஹாத்தியில் நடைபெறுகிறது.


