News March 24, 2025
இப்படத்தை ட்ரோல் செய்தால், சிவன் சபித்து விடுவார்: நடிகர்

தெலுங்கில் தயாராகும் ‘கண்ணப்பா’ என்ற படம், பான் இந்திய படமாக முன்னெடுக்கப்படுகிறது. பட நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரகுபாபு, ‘இப்படத்தை ட்ரோல் செய்தால், சிவனின் கோபத்திற்கு உள்ளாகி, சபிக்கப்படுவீர்கள்’ என பேசினார். இதனால் கடுப்பான நெட்டிசன்கள், ‘நல்ல படம் எடுக்கவில்லை என்றால், நீங்க தான் நரகத்திற்கு போவீர்கள்’ என கவுண்ட்டர் கொடுத்து வருகின்றனர். அவரின் கருத்து பற்றி நீங்க என்ன சொல்றீங்க?
Similar News
News March 27, 2025
போன்களால் ₹250 கோடி பணம் கண்டுபிடிப்பு: நிர்மலா

சமூக வலைதளங்கள், மொபைல் போன்களில் ஆய்வு செய்ததன் மூலம் கணக்கில் வராத ₹250 கோடியை கண்டறிய முடிந்ததாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். எனவே டிஜிட்டல் தரவுகளை ஆராய்வது அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார். இதன்மூலம், வரி செலுத்துவோரின் இமெயில், சமூக வலைதளங்களை ஆராய அதிகாரிகளுக்கு உரிமை வழங்கும் புதிய வருமான வரி மசோதாவிற்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அவர் இப்படி பேசியிருக்கிறார்.
News March 27, 2025
அதிக தங்கம் வைத்துள்ள நாடுகள் – இந்தியா எந்த இடம்?

தங்கம் விலை நாள்தோறும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. உலகில் அதிக தங்கத்தை கைவசம் வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் 8,133 டன்னுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. ஜெர்மனி(3,362), இத்தாலி(2,451), பிரான்ஸ்(2,436), ரஷ்யா(2,295) உள்ளிட்ட நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இதில், இந்தியா(687) 9வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியா முதலிடம் வர என்ன செய்ய வேண்டுமென நினைக்கிறீர்கள்?
News March 27, 2025
சவுக்கு சங்கர் வழக்கில் கைதானோருக்கு பிணை

சவுக்கு சங்கர் வழக்கில் கைதான 5 பேருக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டை கடந்த மார்ச் 24ஆம் தேதி ஒரு கும்பல் சூறையாடியது. டைனிங் டேபிள், படுக்கை அறைகளில் சாக்கடை நீரை ஊற்றினர். இது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று மாலை 2 பெண்கள் உட்பட 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.