News August 31, 2025
தினமும் ₹50 சேமித்தால், ₹1 லட்சம் தரும் திட்டம்

பணம் சேமிப்பதற்கு பல வழிகள் இருந்தாலும், அஞ்சல் அலுவலகத்தின் தொடர் வைப்புத் திட்டம் சிறந்த வழியாக இருக்கிறது. பெரிய தொகையை சேமிக்க முடியாதவர்கள் இத்திட்டத்தில் தினமும் வெறும் ₹50 சேமித்து, 6.7% வட்டியோடு, 5 ஆண்டுகளில் ₹1 லட்சம் வரை பெறலாம். உங்களால் எவ்வளவு சேமிக்க முடிகிறதோ அதற்கு ஏற்றார் போல் தொகை கிடைக்கும். Post Office-க்கு சென்று உங்களுக்காக கணக்கை தொடங்குங்கள். SHARE.
Similar News
News September 1, 2025
வாழ்க்கையில் தொலைக்கவே கூடாத நண்பர்கள்

ஸ்கூல், காலேஜ், பணியிடம் என தினம் தினம் 50 நபர்களையாவது நாம் சந்திப்போம். ஆனால் அவர்கள் அனைவரும் உண்மையான நண்பர்களா என்றால், இல்லை. உண்மையான நண்பர்களுக்கென தனி பண்புகள் இருக்கும். அப்படியான நண்பர்கள் நமது வாழ்வில் இருந்தால் இந்த உலகத்தில் சாத்தியமற்றது என ஒன்றுமே இல்லை. அப்படிப்பட்ட நண்பர்கள் உங்களுக்கு இருந்தால் அவர்களை வாழ்வில் மிஸ் பண்ணிடாதீங்க.
News September 1, 2025
மீண்டும் ‘மீசைய முறுக்கும்’ ஹிப் ஹாப் ஆதி

2017-ல் சூப்பர் ஹிட்டான ‘மீசைய முறுக்கு’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. ஹிப் ஹாப் ஆதி இயக்குநராகவும், நடிகராகவும் அறிமுகமான படம் ‘மீசைய முறுக்கு’. இப்படம் வசூல் ரீதியாக பெற்ற வெற்றியை தொடர்ந்து பிறகு ஹிப் ஹாப் ஆதி ஹீரோ ஆக ‘அன்பறிவு’, ‘வீரன்’, ‘நட்பே துணை’ ஆகிய படங்களில் நடித்தார். இந்த நிலையில் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. சுந்தர்.சி இப்படத்தை தயாரிக்கிறார்.
News September 1, 2025
அதிமுக கூட்டணியில் பாமக? வெளியான தகவல்

அதிமுக கூட்டணியில் பாமக இணையவிருப்பதாக, கட்சியின் மா.செ., கூட்டத்தில் EPS பேசியிருந்தார். இதுகுறித்து ராமதாஸுக்கு நெருக்கமானவரும், பாமக MLA-வுமான அருள் விளக்கம் அளித்துள்ளார். அதில், கூட்டணி விவகாரத்தில் ராமதாஸ் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்றும், மக்கள் எதிர்பார்க்கும் கூட்டணியை அவர் அறிவிப்பார் எனவும் குறிப்பிட்டுள்ளார். அதிமுக- பாமக கூட்டணி இயற்கையானது என ராமதாஸ் ஏற்கெனவே கூறியிருந்தார்.