News April 8, 2024
ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள்

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் அதை வாங்கிக் கொள்ளுங்கள் என நடிகர் விஜய் ஆண்டனி கூறியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “விஜய் தொடங்கியுள்ள அரசியல் கட்சிக்கு எனது ஆதரவு உண்டு. ஓட்டுக்கு பணம் கொடுத்தால், வறுமை, சூழ்நிலை கருதி அந்த பணத்தை வாங்கி கொள்ளுங்கள். ஆனால், பணம் பெற்றதால் அந்த கட்சிக்கு தான் ஓட்டு போட வேண்டும் என முடிவு செய்யாமல், நல்லவர்களுக்கு வாக்களியுங்கள்” எனத் தெரிவித்தார்.
Similar News
News March 23, 2026
கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி.. மத்திய அரசின் ஹேப்பி நியூஸ்

PM மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தில், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களின் ஆரோக்கியத்திற்காக முதல் குழந்தைக்கு ₹5,000 வழங்கப்படுகிறது. அதேபோல, 2-வது முறையாக பெண் குழந்தை பெறுபவர்களுக்கு ₹6,000 கிடைக்கும். இதில் பயன்பெற SC/ST வகுப்பை சேர்ந்தவராக இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ₹8 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். 2 தவணைகளாக வழங்கப்படும் தொகைக்கு <
News March 23, 2026
2 மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, <<19433149>>தென்காசி, நெல்லை<<>> மாவட்டங்களில் ஏப்.1(புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஏப்.1-ம் தேதி முழு ஆண்டு தேர்வும் தொடங்கவிருப்பதால் பள்ளி மாணவர்களிடையே சற்று குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில், உள்ளூர் விடுமுறை அறிவிப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொருந்தாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. SHARE IT
News March 23, 2026
பயணக் காப்பீடு Vs மருத்துவக் காப்பீடு: எது அவசியம்?

*பயணக் காப்பீடு குறுகிய கால பயணத்தில் விபத்துகள், மருத்துவ அவசரங்களுக்கு உதவும். இது பொதுவாக 30-60 நாட்கள் வரை மட்டுமே செல்லுபடியாகும். ஏற்கனவே உள்ள மருத்துவ பிரச்னைகளுக்கு கவரேஜ் வழங்காது *மருத்துவ காப்பீடு, நோய் or விபத்து காரணமாக ஏற்படும் நீண்ட கால சிகிச்சை & தொடர்புடைய செலவுகளை சமாளிக்க உதவும். இது ஒரு நீண்ட காலத் திட்டமாகும்.
மேலும், ஏற்கனவே உள்ள மருத்துவ பிரச்னைகளுக்கு கவரேஜ் கிடைக்கும்.


