News July 6, 2025
இந்த தப்பை செய்தால் PF பென்சன் கிடைக்காது

உங்களுடைய PF கணக்கில் இந்த விதியை மீறினால் பென்சன் பணம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். EPFO வகுத்துள்ள விதிகளின்படி, எந்தவொரு ஊழியரும் தனது PF கணக்கில் 10 ஆண்டுகளுக்கு பணத்தை டெபாசிட் செய்தால், அவர் ஓய்வூதியம் பெற தகுதியுடையவர் ஆகிறார். அந்த ஊழியர் 50 வயதுக்குப் பிறகு ஓய்வூதியம் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் கணக்கின் முழுத் தொகையையும் எடுத்தால் உங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காது.
Similar News
News July 7, 2025
கல்லூரிகளில் இசை வெளியீடு: சசிகுமார் அதிருப்தி

‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தை தொடர்ந்து சசிகுமார் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘பிரீடம்’. சத்யசிவா இயக்கிய இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இசை வெளியீட்டு விழாவில் பேசிய சசிகுமார் கல்வி நிறுவன வளாகங்களில் என்னுடைய படங்களுக்கு இசை வெளியீட்டு விழா நடத்துவதில் உடன்பாடு இல்லை என தெரிவித்துள்ளார். கல்வி நிறுவனங்களுக்குச் சென்று படத்தை பார்க்க அழைப்பதில் தனக்கு விருப்பம் இல்லை எனவும் கூறியுள்ளார்.
News July 7, 2025
ராசி பலன்கள் (07.07.2025)

➤ மேஷம் – ஆதாயம் ➤ ரிஷபம் – உயர்வு ➤ மிதுனம் – புகழ் ➤ கடகம் – அச்சம் ➤ சிம்மம் – நட்பு ➤ கன்னி – உயர்வு ➤ துலாம் – இரக்கம் ➤ விருச்சிகம் – பரிவு ➤ தனுசு – பகை ➤ மகரம் – போட்டி ➤ கும்பம் – நஷ்டம் ➤ மீனம் – கவலை.
News July 7, 2025
சர்வதேச வளர்ச்சியில் தெற்கின் பங்கு என்ன? மோடி பேச்சு

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். மாநாட்டில் அமைதி, பாதுகாப்பு மற்றும் உலகளாவிய ஆளுமை சீர்திருத்தத்திற்கான அமர்வில் உரையாற்றினேன் என X-ல் PM மோடி பதிவிட்டுள்ளார். உலக வளர்ச்சிக்கு முன்பு இருந்ததை விட தெற்குலகின் குரல் ஏன் மிகவும் முக்கியமானது என்பது குறித்து தனது பார்வைகளைப் பகிர்ந்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.