News August 9, 2025

சளி என்று போனால் நாய்கடி ஊசி போடுகிறார்கள்: EPS

image

தற்போது அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், நர்ஸுகள், மருந்துகள் போதியளவில் இல்லை என இபிஎஸ் குற்றம் சுமத்தியுள்ளார். அருப்புக்கோட்டையில் பேசிய அவர், சளி என்று அரசு மருத்துவமனைக்கு சென்றால் நாய்க்கடிக்கு ஊசி போடுவதாக விமர்சித்தார். கடந்த அதிமுக ஆட்சியில் கையில்லாதவருக்கு கைகள் கொடுத்தோம். திமுக ஆட்சியில் காலோடு போனால் கால் இல்லாமலும், உயிரோடு போனால் உயிரில்லாமல் வருவதாகவும் சாடினார்.

Similar News

News December 18, 2025

விருதுநகர் அருகே கண்மாயில் கிடந்த ஆண் சடலம்

image

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி மாங்குளம் கண்மாயில் இன்று டிசம்பர் 18 அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் விரைந்து சென்று அந்த சடலத்தை மீட்டு விசாரித்ததில் அவர் பாளையம்பட்டியை சேர்ந்த தெய்வேந்திரன்(54) என தெரிய வந்தது.‌ அவர் தவறி விழுந்து இறந்தாரா வேறு ஏதேனும் காரணமா என வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 18, 2025

BREAKING: தவெகவில் இணைகிறார்கள்.. விஜய்

image

செங்கோட்டையனை தொடர்ந்து மேலும் பலர் தவெகவில் இணைய உள்ளனர் என்று விஜய் வெளிப்படையாக அறிவித்துள்ளார். மற்ற கட்சிகளில் இருந்து வருபவர்களுக்கு தவெகவில் உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். ஏற்கெனவே, முன்னாள் அமைச்சர்கள் பலர் தவெகவில் இணையவுள்ளதாக செங்கோட்டையன் கூறியிருந்த நிலையில், அதனை விஜய்யும் தற்போது உறுதி செய்துள்ளார்.

News December 18, 2025

டெல்லியை குளிர்விக்க EPS ஒத்து ஊதுகிறார்: CM

image

MGNREGA திட்டத்தின் பெயர் மாற்றத்தை கைவிடக் கோரி, ‘பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்’ EPS அழுத்தம் கொடுத்துள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களை காக்க குரல் கொடுக்க சொன்னால், டெல்லியை குளிர்விக்க EPS அறிக்கை விட்டுள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். 125 வேலைநாள்கள் என்பது பேப்பரில் மட்டுமே இருக்கப்போகிறது என அனைவரும் சுட்டிக்காட்டியும் அதை அறியாத அப்பாவியா அவர் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!