News March 1, 2025
உங்களிடம் ₹100, ₹200, ₹500 நோட்டு இருந்தா இதை பாருங்க

ரூபாய் நோட்டுகளின் நுனிப்பகுதியில் கோடுகள் இருப்பது ஏன் என தெரியுமா?. பார்வை குறைபாடு உள்ளவர்கள் நோட்டின் மதிப்பை அடையாளம் காண, இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கோடுகள் ₹100, ₹200, ₹500 நோட்டுகளில் மட்டும்தான் இருக்கும். ஒவ்வொரு கோட்டிற்கு தகுந்தார் போல வரிகள் இருக்கும். எ.கா: ₹100 தாளில் அதன் இருபுறமும் 4 கோடுகள் இருக்கும். ₹200ல் 4 வரிகளுக்கு இடையில் வட்ட புள்ளிகள் இருக்கும்.
Similar News
News March 2, 2025
விஜய் பிரசாரம் செய்தால் பலம்: பிரசாந்த் கிஷோர்

தங்கள் கட்சிக்காக, TVK தலைவர் விஜய் பிரசாரம் செய்தால் எங்களுக்கு அது மிகப்பெரிய பலம் என பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். தனியார் டிவியில் பேசிய அவர், பிஹாரில் உள்ள பெரும்பாலான குடும்பங்கள் நண்பகல் வேளையில் டப்பிங் செய்யப்பட்ட தென்னிந்திய திரைப்படங்களை தான் பார்ப்பார்கள் எனத் தெரிவித்தார். தேர்தல் வியூக வகுப்பாளரான PK, சமீபத்தில் ஜன் சுராஜ் என்ற கட்சியை தொடங்கி பிஹார் MLA தேர்தலிலும் போட்டியிட்டார்.
News March 2, 2025
WOMEN’S HEALTH: தொடையில் இப்படி இருக்கிறதா?

பெண்களுக்கு இடுப்பு, தொடை & கால் சருமத்தில் தோன்றும் மேடு பள்ளமான கொழுப்புத் திட்டுகள், உடல் தோற்றத்தின் அழகை பாதிக்கலாம். இது அதிக உடல்பருமன் கொண்ட பெண்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும். சருமத் தோலில் கொழுப்பு ஆங்காங்கே திட்டுத்திட்டாக சேர்வதே இதற்கு காரணம். இதிலிருந்து விடுபட பல்வேறு சிகிச்சைகள் உள்ளன. எனினும், மசாஜ், டிரை பிரஷிங், டயட் போன்ற எளிதான வழிகள் மூலமும் இதை கட்டுப்படுத்தலாம்.
News March 2, 2025
ரூ.23.48 லட்சம் கோடி UPI பரிவர்த்தனை

கடந்த ஜனவரி மாதத்தில் நாட்டு மக்கள், ஜிபே, போன் பே உள்ளிட்ட UPI வசதிகள் மூலம் மேற்கொண்ட பணப்பரிவர்த்தனை விவரம் வெளிவந்துள்ளது. அதில், ஜனவரி மாதத்தில் மட்டும் நாட்டு மக்கள் ரூ.23.48 லட்சம் கோடிக்கு பரிவர்த்தனை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. 16.99 பில்லியன் எண்ணிக்கை பரிவர்த்தனை நடந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. UPI பரிவர்த்தனையில் இது பெரிய சாதனை எனப்படுகிறது. நீங்கள் UPI பயன்படுத்துறீங்களா?