News March 1, 2025
உங்களிடம் ₹100, ₹200, ₹500 நோட்டு இருந்தா இதை பாருங்க

ரூபாய் நோட்டுகளின் நுனிப்பகுதியில் கோடுகள் இருப்பது ஏன் என தெரியுமா?. பார்வை குறைபாடு உள்ளவர்கள் நோட்டின் மதிப்பை அடையாளம் காண, இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கோடுகள் ₹100, ₹200, ₹500 நோட்டுகளில் மட்டும்தான் இருக்கும். ஒவ்வொரு கோட்டிற்கு தகுந்தார் போல வரிகள் இருக்கும். எ.கா: ₹100 தாளில் அதன் இருபுறமும் 4 கோடுகள் இருக்கும். ₹200ல் 4 வரிகளுக்கு இடையில் வட்ட புள்ளிகள் இருக்கும்.
Similar News
News March 3, 2025
தமிழக மீனவர்களும் இந்தியர்கள் தான்: முதல்வர்

தமிழக மீனவர்களை இந்திய மீனவர்களாக பார்க்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நாகையில் நடந்த விழாவில் பேசிய அவர், கடந்த 10 வருடங்களில் இலங்கை கடற்படையால் 3,656 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர் என்றார். கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க தமிழக மீனவர்களை அனுமதிக்க வேண்டும் எனவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தில் மத்திய அரசு விளையாடக் கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
News March 3, 2025
5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்: IMD

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்ப நிலை 2- 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும் என்று IMD தெரிவித்துள்ளது. இன்று முதல் 7ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது. அதேபோல,
தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நாளை தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவும் என்றும் IMD கணித்துள்ளது.
News March 3, 2025
முன்பு திமுக, தற்போது தவெக.. PKவின் பிளான் பலிக்குமா?

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றிக்காக பிரசாந்த் கிஷோரின் (PK) குழு பணிபுரிந்ததாக கூறப்படுவதுண்டு. ஆனால் இதை 2 தரப்பும் இதுவரை அதிகாரப்பூர்வமாக சொன்னதில்லை. இந்நிலையில், 2026ம் ஆண்டு தேர்தலில் விஜய்யின் தவெக கட்சிக்காக களமிறங்கியுள்ளது PK குழு. முந்தையத் தேர்தலில் PKவின் திட்டம் வென்ற நிலையில், 2026 தேர்தலில் மீண்டும் பலிக்குமா? இல்லையா? என்பது மக்கள் கையிலேயே உள்ளது.