News March 26, 2024
அதிக வாக்குகள் பெற்றுத் தந்தால் 6 பவுன் தங்கம்!

மகளிருக்கு வழங்கும் உரிமைத் தொகையை எப்போது வேண்டுமானாலும் திமுக அரசு நிறுத்திவிடுமென அண்ணாமலை பொய் பிரசாரம் செய்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றம்சாட்டியுள்ளார். ஒரத்தநாட்டில் திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய அவர், ‘தஞ்சாவூரில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்றுத் தரும் திமுக மாவட்டச் செயலாளருக்கு, எனது செலவில் 6 பவுன் சங்கிலி பரிசாக வழங்கப்படும்’ என்றார்.
Similar News
News January 22, 2026
TTV தேர்தலில் போட்டியிடவில்லையா?

EPS-க்கு எதிராக தொடர்ந்து பேசிவந்த TTV தினகரன், CM வேட்பாளராக EPS இருக்கும் NDA கூட்டணியில் நேற்று மீண்டும் இணைந்தார். இந்நிலையில் அமமுகவின் தொகுதி பங்கீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சட்டமன்ற தேர்தலில் 8+ 1 ராஜ்யசபா சீட்டை TTV கேட்டுள்ளார். மேலும் இந்த முறை தான் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும், அந்த 1 ராஜ்யசபா சீட் மட்டும் கொடுத்துடுங்க என கண்டிஷனாக சொல்லிவிட்டாராம்.
News January 22, 2026
நாங்கள் அரசியல் கட்சி அல்ல: OPS

தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், OPS இன்னும் தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் உள்ளார். இதனால் அவர் பக்கம் நின்ற முக்கிய தலைவர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் மாற்று கட்சியில் இணைந்துவிட்டனர். இந்நிலையில் அரசியலில் சரியான முடிவு எடுக்காததால்தான் நிர்வாகிகள் கட்சியை விட்டு வெளியேறுகின்றனரா? என செய்தியாளர்கள் கேட்க, நாங்கள் அரசியல் கட்சி அல்ல என OPS பதில் அளித்தார்.
News January 22, 2026
ஜன நாயகன் ரிலீஸில் அடுத்த சிக்கல்

சென்சார் சிக்கலில் உள்ள ‘ஜன நாயகன்’ படத்தை முன்னதாகவே அமேசான் பிரைம் வாங்கியிருந்தது. ஆனால், பட ரிலீஸ் தேதி முடிவாகாததால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு அமேசான் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் விஜய் தரப்பு அடுத்தடுத்து சிக்கலை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.


