News April 28, 2025
16 திங்கட்கிழமை சிவனுக்கு விரதம் இருந்து வழிபட்டால்..

16 திங்கட்கிழமைகளில் சிவனை வழிப்படுவது, மனக்கஷ்டங்கள் நீங்க செய்யும் என்பது நம்பிக்கை. இந்த விரதத்தை மேற்கொள்ள, ஒவ்வொரு திங்கள் காலையிலும் நீராடி, சிவன் பார்வதிக்கு பூஜை செய்யவேண்டும். அன்று ஒரு நாள் உணவிற்கு பதிலாக பழச்சாறுகள், பால், பழம் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். பூஜைக்கு வில்வ இலைகள், செவ்வரளி மலர்கள், சங்கு பூக்களையும், நைவேத்தியமாக பாயாசம் அல்லது சர்க்கரைப் பொங்கல் வைத்து வழிபடலாம்.
Similar News
News October 25, 2025
குட்காவில் இந்த மாநிலங்கள் தான் டாப்பு!

வட இந்தியாவில் பல Highlight-டான விஷயங்கள் இருந்தாலும், நம்மூர் மக்களுக்கு சட்டென ஞாபகம் வருவது குட்கா கறைதான். அப்படி இந்தியாவில் அதிகளவில் குட்கா எடுத்துக் கொள்ளும் மாநிலங்களின் டாப் 5 பட்டியலை மேலே கொடுத்துள்ளோம். எந்த மாநிலம் டாப்பில் இருக்கிறது என்பதை அறிய போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து பார்க்கவும். குட்காவை ஒழிக்க ஒரு சிம்பிள் ட்ரிக்ஸை சொல்லுங்க?
News October 25, 2025
சற்றுமுன்: பின்வாங்கினார் விஜய்

கரூர் துயரம் நடந்து சுமார் ஒரு மாதமாகிறது. பாதிக்கப்பட்ட மக்களை விஜய் இன்னும் சந்திக்கவில்லை. அனுமதி கிடைத்ததும் அவர் கரூர் செல்வதாக முதலில் கூறப்பட்டது. இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களை மாமல்லபுரம் அழைத்து விஜய் ஆறுதல் தெரிவிக்கவுள்ளார். இதனால், தனது முடிவில் இருந்து விஜய் பின்வாங்கி இருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களை அழைத்து தான் ஆறுதல் கூட சொல்வீர்களா எனவும் அரசியல் கட்சிகள் விமர்சிக்கின்றன.
News October 25, 2025
Hitman அரைசதம்!

இந்திய அணியின் ஓபனர் Hitman ரோஹித் சர்மா 63 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார். 2-வது ODI-யிலும் அவர் அரைசதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக ODI-யில் இது ரோஹித் சர்மாவுக்கு 60-வது அரைசதமாகும். இந்திய அணி தற்போது வரை 20.1 ஓவர்களில் 119/1 ரன்களை எடுத்துள்ளது.


