News June 18, 2024
இதை செய்தால் 15 வருடங்களில் கோடீஸ்வரர்!

40 வயதில் கோடீஸ்வரராக நிதி ஆலோசகர்கள் சில ஆலோசனை அளித்துள்ளனர். 25 வயதாகும் நபர் மாதம் ரூ.25,000- ரூ.30,000 ஊதியம் ஈட்டுகிறார் எனில், 15:15:15 என்ற மியூச்சுவல் பண்ட் விதிப்படி, மாதம் ரூ.15,000 தொடர்ச்சியாக முதலீடு செய்து, ஆண்டுக்கு 15% வட்டி கிடைத்தால், 40 வயதில் ரூ.1 கோடி கிடைக்கும். எனவே 15% வட்டித் திட்டத்தில் முதலீடு செய்து கோடீஸ்வரராகும்படி நிதி ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 14, 2025
வாய்விட்ட டிரம்ப்; சமாளிக்கும் USA அரசு

USA-வில் திறமையானவர்கள் இல்லை என <<18265884>>டிரம்ப்<<>> கூறியிருந்தார். இதற்கு அமெரிக்கர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், திறமை கொண்ட வெளிநாட்டு பணியாளர்களை USA-வுக்கு கொண்டு வந்து, 3-7 ஆண்டுகள் வரை அவர்கள் மூலம் அமெரிக்கர்களுக்கு பயிற்சியளித்து, பின்னர் அவர்களை தாயகம் அனுப்பி வைக்க வேண்டும் என்பதே டிரம்ப்பின் திட்டம் என கூறி, அந்நாட்டின் நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் விளக்கமளித்துள்ளார்.
News November 14, 2025
BREAKING: திமுகவில் இணைந்த உடன் முக்கிய பதவி

திமுகவில் இணைந்த அதிமுக Ex MP மைத்ரேயன், திமுக கல்வியாளர் அணியின் துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியில் இணைந்த சில நாள்களிலேயே அவருக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோருக்கும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, திமுகவின் சீனியர்களுக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
News November 14, 2025
Byelection results: தேசிய கட்சிகள் முன்னிலை

ஜூபிளி ஹில்ஸ் (தெலங்கானா) – காங்., தரன் தரன் (பஞ்சாப்) – ஆம் ஆத்மி, கட்ஸிலா (ஜார்க்கண்ட்) – JMM, அன்டா (ராஜஸ்தான்) – காங்., டம்பா (மிசோரம்) – மிசோ தேசிய முன்னணி, நுவாபடா (ஒடிசா) – BJP, புட்கம் – ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி, நக்ரோட்டா (ஜம்மு காஷ்மீர்) – BJP என முன்னணியில் உள்ளன. இடைத்தேர்தல் நடைபெற்ற 8 தொகுதிகளில் தலா 2 இடங்களில் BJP, காங்., முன்னிலையில் உள்ளன.


