News March 16, 2024

இதை செய்தால் வீட்டிலிருந்து வாக்களிக்கலாம்

image

Form 12 D விண்ணப்பத்தை நிரப்பியளித்தால், வீட்டில் இருந்து 85 வயதுக்கும் மேற்பட்ட முதியோர் வாக்களிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் 85 வயதுக்கும் மேற்பட்ட முதியோர் 81,87,999 பேரும், 100 வயதுக்கும் மேற்பட்ட முதியோர் 2,18,442 பேரும் உள்ளனர். அவர்கள், தேர்தல் அறிவிப்பு வெளியான 5 நாள்களுக்குள் விண்ணப்பத்தை அளித்தால், வீட்டில் இருந்து வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Similar News

News November 20, 2025

BREAKING: தங்கம் விலை ₹800 குறைந்தது

image

நேற்று சவரனுக்கு ₹1,600 அதிகரித்த தங்கம் இன்று(நவ.20) சவரனுக்கு ₹800 குறைந்துள்ளது. இதனால், தற்போது, 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹11,500-க்கும், சவரன் ₹92,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் 2 நாள்களாக உயர்ந்து வந்த தங்கம், தற்போது சரிவைக் கண்டுள்ளதால் நம்மூர் சந்தையிலும் தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News November 20, 2025

தவெகவில் இருந்து நீக்கப்படுகிறாரா ஆதவ்?

image

தவெகவில் ஆதவ் மீது அதிருப்தி அதிகரித்து வருவதாக பேசப்படுகிறது. சமீபத்தில், திமுகவுக்காகவே ஆதவ் தவெகவுக்கு சென்றதாக லாட்டரி மார்டினின் மகன் குற்றஞ்சாட்டியிருந்தார். இதனை ஆதவ் மறுக்கவில்லை. ஏற்கெனவே விஜய்யை கேட்காமல் கூட்டணி பேச்சுகளை லீட் செய்ததாக அவர்மீது பலரும் அதிருப்தியில் இருந்தார்களாம். இந்நிலையில், ஆதவ் மீதான சார்ஜஸ் அதிகரித்துகொண்டே போவதால் தலைமையின் ரேடாரில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது.

News November 20, 2025

உக்ரைன் போர்: ரஷ்யா பக்கம் சாய்கிறதா அமெரிக்கா?

image

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர புதிய அமைதி திட்ட வரைவை USA முன் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், உக்ரைன் அதன் கட்டுப்பாட்டில் உள்ள சில பகுதிகளை ரஷ்யாவுக்கு, விட்டுக்கொடுக்கவும், தனது ராணுவ படைகளின் எண்ணிக்கையை குறைக்கவும் வலியுறுத்துகிறது. இது உக்ரைனுக்கு பின்னடைவாக இருக்கும் என கூறும் நிபுணர்கள், ரஷ்யாவுக்கு ஆதரவாக USA மறைமுகமாக செயல்படுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.

error: Content is protected !!