News March 24, 2025
இதை செய்தால் 60% மின்சாரத்தை சேமிக்கலாம்!

கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில், வீடுகளில் AC பயன்பாடும் அதிகரித்துள்ளது. இதனால், மின்சாரப் பயன்பாடும் உயர்ந்துள்ளது. இந்நிலையில், 5 Star தரம் வாய்ந்த ACகளைப் பயன்படுத்தினால் 60% வரை மின்சாரத்தை சேமிக்க முடியும் என மின்வாரிய அதிகாரிகள் பரிந்துரைக்கின்றனர். 8 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே ACக்களை பயன்படுத்தினால், 40-50% அதிக மின்சாரம் செலவாகும் எனவும், 24°Cல் ACயை பயன்படுத்துவதே சிறந்தது என்கின்றனர்.
Similar News
News November 16, 2025
மாற்றி மாற்றி பேசிய கே.என்.நேரு

திருப்பதி கோயிலுக்கு ₹44 லட்சம் நன்கொடை வழங்கியது குறித்து கே.என்.நேரு புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். கோயிலுக்கு 44 லட்சம் கொடுக்கும் அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை என்ற அவர், உறவினர் கொடுத்துவிட்ட பணத்தை கோயிலில் செலுத்தியதாக கூறியுள்ளார். முன்னதாக, நான் பணம் கொடுக்கக்கூடாதா என கோபமாக பேசியிருந்தார். இப்படி இவர் மாற்றி மாற்றி பேசியுள்ளது சர்ச்சையாகி உள்ளது.
News November 16, 2025
நாளை வெளியே வராதீங்க: முதல் மாவட்டமாக அலர்ட்

நாளை, நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை வெளுத்து வாங்க வாய்ப்புள்ளதாக IMD எச்சரித்துள்ளது. குறிப்பாக, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதுச்சேரியில் நாளை, நாளை மறுநாள் கன முதல் அதி கனமழை பெய்யக்கூடும். எனவே, பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அம்மாநில அரசு எச்சரித்துள்ளது.
News November 16, 2025
Op.Sindoor எதற்கும் உதவவில்லை: ஃபரூக்

டாக்டர்கள் டெல்லி குண்டு வெடிப்பில் ஈடுபட்டது ஏன், அவர்கள் இந்த பாதையை தேர்ந்தெடுக்க யார் காரணம் என ஃபரூக் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டும் என கூறிய அவர், சிந்தூர் ஆபரேஷனால் ஒரு பிரயோஜனமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். இதனால், நமது நாட்டு மக்கள் 18 பேர்தான் பலியானார்கள் எனவும், எல்லை நாடுகளுடன் சமாதான பேச்சு நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.


