News September 25, 2025
இனி இப்படி செய்தால் PF பணம் கிடையாது

EPF 1952 விதியின் கீழ், திருமணம், படிப்பு, உடல்நல பிரச்னைகள் உள்ளிட்ட வரையறுக்கப்பட்ட காரணங்களுக்காகவே PF தொகையை எடுக்க வேண்டும் என EPFO அறிவுறுத்தியுள்ளது. இதை தவிர வேறு ஏதும் காரணங்களுக்காக PF பணத்தை எடுத்தால் 3 ஆண்டுகளுக்கு பணம் எடுக்க முடியாது என EPFO எச்சரிக்கை விடுத்துள்ளது. அல்லது அந்த தொகையை அபராதத்துடன் செலுத்தும் வரை மீண்டும் பணம் எடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
Similar News
News September 25, 2025
தன் சாதனையை தகர்த்த சிறுமிக்கு கமல் பாராட்டு

தேசிய விருது வென்ற 4 வயது சிறுமியை கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். ‘நாள் 2’ படத்திற்காக சிறுமி த்ரிஷா தோஷர் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது வென்றிருந்த நிலையில், நான் 6 வயதில் தான் வென்றிருந்தேன், அதை தற்போது நீங்கள் முறியடித்துள்ளீர்கள் என கமல்ஹாசன் x-ல் வாழ்த்து கூறியுள்ளார். ‘களத்தூர் கண்ணம்மா’ படத்திற்காக கமல் 6 வயதில் தேசிய விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
News September 25, 2025
மாரடைப்பு வரப்போவதை முன்கூட்டியே அறிய டெஸ்ட்

சிறியவர்கள், இளைஞர்கள் என வயது வித்தியாசமின்றி பலரும் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைகின்றனர். சாதாரணமாக புறக்கணிக்கப்படும் சோர்வு, தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகளுக்கு பின்னாலும் மாரடைப்பு ஆபத்து இருக்கலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இதனை CRP (C-Reactive Protein) ரத்த டெஸ்ட் மூலம் கண்டறியலாம். CRP அளவு அதிகரித்தால், கொழுப்பு சாதாரணமாக இருந்தாலும் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளதாம்.
News September 25, 2025
பள்ளிகளுக்கு விடுமுறை.. புதிய அறிவிப்பு

1-5 & 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று காலாண்டு தேர்வு நிறைவடைந்தது. அதேநேரம், நாளை(செப்.26) அவர்களுக்கு பள்ளி வேலைநாளாகும். நாளைய தினம் 6 – 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித் தேர்வு நடைபெறவுள்ளது. காலாண்டு விடுமுறை (செப்.27 – அக்.5) நாள்களில் மாணவர்களின் கல்வித்திறன் மேம்பாடு மற்றும் மழைக்காலம் என்பதால் பாதுகாப்புகள் குறித்து எடுத்துரைக்கவும் ஆசிரியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.