News March 30, 2025

காலையில் இதை செய்தால் வீட்டில் பண மழை கொட்டும்!

image

வாஸ்து சாஸ்திரப்படி, தினமும் காலையில் 5 விஷயங்களை செய்தால் வீட்டில் பண மழை கொட்டுமாம். 1) சூரிய உதயத்திற்கு முன் எழுந்து வேலையை தொடங்க வேண்டும். 2) ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்துவிட்டு கடவுளை தியானிக்க வேண்டும். 3) படுக்கையை ஒழுங்குப்படுத்த வேண்டும். 4) வீட்டின் நுழைவு வாயிலை சுத்தம் செய்ய வேண்டும். 5) ஜன்னல், கதவுகளை திறந்துவைத்து விளக்கு ஏற்ற வேண்டும். இதை செய்தால் செழிப்பான வாழ்க்கை அமையுமாம்.

Similar News

News April 1, 2025

வெப்ப அலை எச்சரிக்கை

image

கோடை வெயில் வழக்கத்தை விடவும் உக்கிரமாகத் தொடங்கி இருக்கிறது. இந்நிலையில், ஜூன் வரை வட தமிழ்நாட்டில் இயல்பை விட வெப்பநிலை அதிகரித்து, வெப்ப அலை வீசக்கூடும் என்று IMD எச்சரித்துள்ளது. இந்த வெப்ப அலைகள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். குழந்தைகள், வயதானவர்கள், நோய்வாய்பட்டவர்களுக்கு வெப்பம் சார்ந்த நோய்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. எனவே, அனைவரும் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 1, 2025

2 கோடி இன்சுரன்ஸ் போச்சே!! செட்டப் விபத்து…

image

டெல்லியில் மகன் விபத்தில் இறந்துவிட்டதாக கூறி ₹2 கோடி இன்சுரன்ஸ் பணம் பெற முயன்ற தந்தை உட்பட 3 பேர் கைதாகினர். சதிஷ் குமார் என்பவர் பைக் விபத்தில் தனது மகனுக்கு காயம் ஏற்பட்டதாக காவல்நிலையத்தில் தெரிவித்துள்ளார். பின்னர் சில நாட்களிலேயே உயிரிழந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து விபத்து நடைபெற்ற இடத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அது செட்டப் செய்யப்பட்ட விபத்து என தெரியவந்தது.

News April 1, 2025

காலையில் சிறுநீர் மஞ்சள் நிறத்தில் செல்கிறதா?

image

இரவு முழுவதும் தண்ணீர் குடிக்காமல் இருப்பதுதான் காலையில் சிறுநீர் அடர் மஞ்சள் நிறமாக மாறுவதற்கான முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. இரவில் நீண்ட நேரம் தண்ணீர் குடிக்காமல் இருப்பது உடலில் நீரிழப்பை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாகச் சிறுநீர் அடர் நிறமாக மாறுகிறது. உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால், சிறுநீர் அடர் நிறமாக மாறக்கூடும். இதனால் சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது.

error: Content is protected !!