News April 17, 2025
காலையில் 30 நிமிடங்களுக்கு இப்படி செய்தால் ..!

வாக்கிங் 10,000 ஸ்டெப்ஸ்தான் நடக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. 30 நிமிடங்களுக்கு நடைபயிற்சி செய்யுங்கள் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். இது உடல் பருமன், வகை 2 நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்றவற்றின் அபாயத்தை குறைக்கும் எனவும் கூறுகின்றனர். ஆனால், நடக்கும்போது, கொஞ்சம் சீரான வேகத்தோடு நடக்க வேண்டும். இது உடலின் சுவாசம் மற்றும் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. SHARE IT.
Similar News
News September 8, 2025
ஸ்டாலினின் கேடுகெட்ட ஆட்சி: அண்ணாமலை சாடல்

<<17644180>>ஏர்போர்ட் மூர்த்தி<<>> கைதுக்கு கண்டனம் தெரிவித்த அண்ணாமலை, கருணாநிதி ஆட்சி காலத்தைவிட கேடுகெட்ட ஆட்சியை ஸ்டாலின் நடத்தி வருவதாக சாடியுள்ளார். தாக்குதல் நடத்திய விசிக ரவுடிகளை விட்டுவிட்டு, தன்னை தற்காத்துக் கொள்ள முயற்சித்த மூர்த்தியை திமுக அரசின் காவல்துறை கைது செய்திருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். 2006 – 11 ஆட்சி காலத்தைவிட இந்த ஆட்சி மோசமாக இருப்பதாகவும் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
News September 8, 2025
TET தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

<<17648092>>TET தேர்வுக்கு<<>> விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைய இருந்தது. ஆனால், பிற்பகல் முதலே சர்வர் பிரச்னை இருந்ததால் விண்ணப்பிக்க முடியாமல் பலரும் தவித்தனர். இந்நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை செப்.10 வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. SHARE IT
News September 8, 2025
சற்றுமுன்: RB உதயகுமாரின் தாய் காலமானார்

அதிமுக Ex அமைச்சர் RB உதயகுமாரின் தாய் மீனாள்(74) காலமானார். உடல்நலக் குறைவால் நீண்ட நாள்களாக ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவரது உயிர் இன்று பிரிந்தது. மீனாளின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள EPS, அவரது ஆன்மா இளைப்பாற இறைவனை பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதிமுக மூத்த தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP