News March 27, 2024
“அதிக வாக்கு வாங்கி கொடுத்தால் 10 சவரன் நகை”

தி.மலை மாவட்டம் போளூரில், ஆரணி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கஜேந்திரனை அறிமுகம் செய்து வைத்து முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசினார். அப்போது “ஆரணி தொகுதியை உள்ளடக்கிய 6 சட்டமன்றத் தொகுதியில் எந்த தொகுதியில் அதிகமான வாக்குகளை பெற்று தருகிறார்களோ, அந்த சட்டமன்றத் தொகுதியை சார்ந்த மாவட்ட, ஒன்றிய, கிளை செயலாளர்களுக்கு 10 சவரன் நகை வழங்கப்படும்” என அறிவித்தார்.
Similar News
News December 31, 2025
ஷமி விஷயத்தில் பிசிசிஐ U-Turn?

நல்ல ஃபார்மில் இருந்தும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பிறகு இந்திய அணியில் ஷமி இடம்பிடிக்காதது பேசுபொருளானது. இந்நிலையில், உள்ளூர் போட்டிகளில் ஷமியின் செயல்பாட்டை பிசிசிஐ கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது. ஷமி உடற்தகுதியுடன் இருந்தால் நியூசிலாந்து ODI தொடருக்கு அவரை தேர்வு செய்யவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாம். ஷமி சிறப்பாக செயல்படும் பட்சத்தில் 2027 WC வரை இந்திய அணியில் நீடிப்பார்.
News December 31, 2025
வடமாநில இளைஞர் உயிரிழப்பா? Fact Check

திருத்தணி சம்பவத்திற்கு கண்டனங்கள் வலுத்துள்ள நிலையில், தாக்குதலுக்கு ஆளான வடமாநில இளைஞர் உயிரிழந்துவிட்டதாக SM-ல் தகவல் பரவியது. ஆனால் அது உண்மையல்ல என்றும் அவர் சொந்த ஊர் திரும்பிவிட்டதாகவும் வடக்கு மண்டல ஜ.ஜி கூறியுள்ளார். இதனிடையே அந்த இளைஞர் கை, தலையில் கட்டுகளுடன் உள்ள வீடியோ வைரலாகியுள்ளது. வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில், இப்படி ஒரு சம்பவம் நடந்தது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும்.
News December 31, 2025
சார்லி சாப்ளின் பொன்மொழிகள்!

*உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம். ஆனால், உன் சிரிப்பு யாரையும் வேதனைப்பட
வைக்கக்கூடாது *சிரிக்காத நாளெல்லாம் வீணான நாட்களே *இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை, உங்கள் பிரச்னைகள் உட்பட *சர்வாதிகாரிகள் தங்களை சுதந்திரமாக இருந்துக் கொண்டு மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள் *உன் மனம் வலிக்கும் போது சிரி, பிறர் மனம் வலிக்கும்போது சிரிக்க வை *புன்னகைத்துப் பாருங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகும்


