News April 2, 2024
இதை செய்திருந்தால் ரூ.500 கோடி கிடைத்திருக்கும்

பாஜக கூட்டணியில் நாம் தமிழர் கட்சியை இணைக்க அக்கட்சி நிர்வாகிகள் தன்னிடம் ஆசை வார்த்தைகளை கூறியதாக சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து தேனியில் பேசிய அவர், “பாஜக கூட்டணியில் நாம் தமிழர் கட்சி இணைந்திருந்தால் ரூ.500 கோடியும், 10 சீட்டுகளும் கிடைத்திருக்கும். அவர்களுடன் கூட்டணி வைக்காததால் நான் கேட்ட சின்னம் கிடைக்கவில்லை. பாஜகவின் கட்சி அலுவலகமாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது” என்றார்.
Similar News
News January 17, 2026
தைராய்டு இருப்பவர்கள் தவிர்க்க வேண்டியவை

தைராய்டு பாதிப்பு உள்ளவர்களுக்கு உணவு கட்டுப்பாடு மிகவும் முக்கியம். குறிப்பாக சில உணவுகள் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அவை என்னென்ன உணவுகள் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் இல்லாத உணவு ஏதேனும் உங்களுக்கு தெரிந்தா கமெண்ட்ல சொல்லுங்க.
News January 17, 2026
சற்றுமுன்: கூட்டணி முடிவை அறிவித்தார்

கூட்டணி குறித்து பொதுவெளியில் யாரும் பேச வேண்டாம் என கட்சியினருக்கு காங்., தலைமை அறிவுறுத்தியுள்ளதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். டெல்லியில்<<18883890>> உயர்நிலைக் கூட்டத்தில்<<>> பங்கேற்றபின் பேசிய அவர், MP, MLA-க்களின் கருத்துகளை தலைமை கேட்டுக் கொண்டது என்றார். அதன் அடிப்படையில், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து தலைமை எடுக்கும் முடிவுக்கு TN காங்கிரஸ் கமிட்டி கட்டுப்படும் எனவும் அவர் கூறினார்.
News January 17, 2026
பள்ளி மாணவர்களுக்கு மேலும் 3 நாள்கள் விடுமுறை

ஜன.14 – 18 வரை பொங்கல் விடுமுறையை பள்ளி மாணவர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், 4-வது வாரத்திலும் 3 நாள்கள் விடுமுறை வருகிறது. அதாவது, ஜன.26 குடியரசு தினம் திங்கள்கிழமை வருவதால் சனி, ஞாயிறு, திங்கள் என தொடர் விடுமுறை வருகிறது. இதனால் இந்த மாதமே விடுமுறை மாதம் தான் என மாணவர்கள் சிலாகிக்கின்றனர். எனவே, வெளியூர் செல்ல திட்டமிட்டுள்ள பெற்றோர், இதற்கேற்ப முன்பதிவு செய்யுங்கள்.


