News April 19, 2024
ஒரு வேளை போர் வந்தால்…

உலக அளவில் இந்தியாவை மிகப்பெரிய வல்லரசு நாடாக மாற்றுவதற்கான தேர்தல் இது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் பிரசாரம் செய்த அவர், உலகளவில் போர் நடந்து வரும் சூழலில் இந்தியாவில் போர்க்கால அடிப்படையில் செயல்படும் அரசு தேவை என்றார். அத்தகைய சூழலில், வலுவான ஆட்சி அமைய வேண்டும். பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைந்தால் மட்டுமே இதைச் செய்ய முடியும் எனத் தெரிவித்தார்.
Similar News
News May 7, 2025
ஏப்ரல் மாதம் செம வசூல்… உச்சம் தொட்ட GST

ஏப்ரல் மாத GST வசூல் 12.6% அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த மாதம் ₹2.37 லட்சம் ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. GST அமலான பிறகு வசூலான அதிகபட்ச தொகை இதுதான். உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலம் ஜிஎஸ்டி வருவாய் 10.7% அதிகரித்து சுமார் ₹1.9 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து வருவாய் 20.8 % அதிகரித்து ₹46,913 கோடியாக உள்ளது.
News May 7, 2025
நடிகர்களை காட்டமாக தாக்கிய ஆர்.கே.செல்வமணி

விஷால் முன்பே நடிகர்கள் குறித்து இயக்குநர் ஆர்.கே.செல்வமணி காட்டமாக பேசியதால், தமிழ் சினிமா துறையில் பேசுபொருளாக மாறியுள்ளது. சூட்டிங்கிற்கு வந்தோம், மேக்கப் போட்டோம், சென்றோம் என நடிகர்கள் இருக்கக்கூடாது. திரைப்பட தொழிலாளர்களுக்கு படத்தின் பட்ஜெட்டில் 5% மட்டுமே சம்பளம் தரப்படுகிறது. படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கும் பொறுப்பு இருக்கிறது. அதனை உணர்ந்து செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
News May 7, 2025
முன்னாள் ராஜ்யசபா MP ரொனால்ட் காலமானார்!

மிசோரம் மாநிலத்தின் காங்கிரஸ் ராஜ்யசபா முன்னாள் MP ரொனால்ட் சபா த்லாவ் (71) காலமானார். இவருக்கு அண்மையில்தான், டெல்லி AIIMS-ல் இதய அறுவை சிகிச்சை நடந்தது. 2014-ல் இவர், ராஜ்யசபா MP ஆக இருந்தார். 2003 முதல் பொதுச் செயலாளர், தலைமை செய்தித் தொடர்பாளர், மருத்துவப் பிரிவுத் தலைவர் போன்ற பதவிகளை வகித்த ரொனால்ட், இறக்கும் வரை மிசோரம் காங்கிரஸ் கமிட்டியின் (MPCC) துணைத் தலைவராக இருந்தார்.