News October 19, 2025
திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறினால்.. திருமா

திமுக கூட்டணியிலிருந்து விசிக வெளியேறினால் இதை தீபாவளியாக கொண்டாடுவார்கள் என திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். பாஜகவுக்கு நேர் எதிராக இருக்கும் ஒரே கட்சி என்றால், அது விசிகதான் எனக் கூறினார். மேலும் திமுக கூட்டணி வலுவாக இருப்பதற்கு விசிக முக்கிய காரணம். இதை உடைக்க வேண்டும் என திட்டமிட்டு ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக விசிக செயல்படுவதுபோல் பொய்யான தோற்றத்தை ஏற்படுத்துவதாக சாடினார்.
Similar News
News October 19, 2025
கல்யாணம் வேண்டாம்.. Kens ஆண்கள் மட்டும் போதும்!

சீனாவில் தற்போது, இதுதான் டிரெண்டிங்காக உள்ளது. வாழ்வில் Commitments வேண்டாம், ஆனால் பார்ட்னர் மட்டும் வேண்டும் என்று முடிவெடுக்கும் பெண்கள், Kens என்ற ஆண்களை தங்களுடன் வைத்து கொள்கிறார்கள். இந்த Kens ஆண்கள் முற்றிலும் Professional. ஒரு வார்த்தை கூட எதிர்த்து பேச மாட்டார்கள். வீட்டு வேலையில் தொடங்கி அனைத்திற்கும் உதவியாக இருப்பார்கள் என்பதால், பெண்கள் மத்தியில் டிமாண்ட் அதிகரித்துள்ளது.
News October 19, 2025
தீபாவளி விடுமுறை.. மக்களுக்கு ஹேப்பி நியூஸ்

தீபாவளியை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட அக்.21-ம் தேதி ஒருநாள் கூடுதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தீபாவளி முடிந்து, பல்வேறு நகரங்களில் இருந்து பொதுமக்கள் திரும்ப ஏதுவாக அக். 21 – 23 வரை 15,129 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிய மற்றும் புகார் தெரிவிக்க 94450 14436 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
News October 19, 2025
தள்ளாடும் இந்தியா!

மழைக்கு பிறகு போட்டி தொடங்கியவுடனே ஷ்ரேயஸ் ஐயர் 11 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். இதனால், இந்திய அணி 45/4 என்ற நிலையில் தள்ளாடி வருகிறது. களத்தில் அக்சர் படேல் 10 ரன்களுடன் இருக்க, KL ராகுல் அடுத்த பேட்ஸ்மேனாக வந்துள்ளார். மழை காரணமாக, போட்டி தலா 35 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய தள்ளாடி வருகிறது.