News March 29, 2024

இந்த நிலை வந்தால் விவசாயம் செய்ய சென்றுவிடுவோம்

image

காசு கொடுத்து வாக்கு வாங்கும் நிலை எங்களுக்கு வந்தால் விவசாயம் செய்ய சென்றுவிடுவோமென நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தென்காசியில் இசை மதிவாணனை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், ‘₹100 கோடி, ₹150 கோடி என செலவழித்து, வாக்குக்கு காசு கொடுத்து, உங்களது வாக்குகளை பெறும் நிலையில் நாம் தமிழர் கட்சி இல்லை. அந்த சூழல் வந்தால் அரசியலை தொடர வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை’ என்றார்.

Similar News

News March 26, 2026

வாலாஜா டோல்கேட்டில் ரூபாய் 58 ஆயிரம் பறிமுதல்

image

ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாலாஜா சுங்கச்சாவடியில் இன்று மார்ச் 26 ஆம் தேதி பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணம் இன்றி ரூபாய் 58 ஆயிரம் வைத்திருந்தது தெரிந்தது. பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து வாலாஜா வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.

News March 26, 2026

மிகப்பெரிய மோசடிக் கட்சி திமுக: அன்புமணி

image

2026 தேர்தலுக்காக புதிய தேர்தல் அறிக்கையை திமுக வெளியிட வேண்டிய அவசியமில்லை என அன்புமணி கூறியுள்ளார். 2021-ல் கொடுத்த 505 வாக்குறுதிகளில் 439-ஐ முழுமையாக நிறைவேற்றாமல் 100% நிறைவேற்றியதாக திமுக கூறுவதாகவும், இதனாலேயே அக்கட்சி ஒரு மோசடி கட்சி என்றும் விமர்சித்துள்ளார். சிலிண்டருக்கு ₹100 மானியம், 5.5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை உள்ளிட்டவை என்ன ஆனது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.<<-se>>#TNElection2026<<>>

News March 26, 2026

விடுமுறை.. நாளை முதல் சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

image

வார இறுதி மற்றும் மஹாவீர் ஜெயந்தி விடுமுறையையொட்டி மக்கள் நெரிசலின்றி ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக, சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது, நாளை முதல் 3 நாள்களுக்கு சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சுமார் 1,000 பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. <>TNSTC<<>> இணையதளம் (அ) மொபைல் ஆப்பில் டிக்கெட் புக் செய்து உங்கள் பயணத்தை எளிதாக்குங்கள். SHARE IT

error: Content is protected !!