News August 7, 2025
பள்ளி மாணவர்களுக்கு பறந்த உத்தரவு

நாடு முழுவதும் CBSE பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 75% வருகைப்பதிவு இருந்தால் மட்டுமே பொதுத்தேர்வு எழுத அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது. வருகைப் பதிவு விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், விளையாட்டு வீரர்கள், மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவற்றுக்கு, உரிய ஆவணங்கள் அடிப்படையில், எழுத்துப்பூர்வ விண்ணப்பங்கள் பெற்று, சிறப்பு அனுமதியுடன் தேர்வு எழுதலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
Similar News
News August 7, 2025
மனித குலத்தின் இருண்ட நாள்!

1945 ஆகஸ்ட் 6.. மனித இனத்தின் இருண்ட நாள். ஹிரோஷிமா நகரம் மீது அணுகுண்டு வீசப்பட்டது. பெரும் சத்தத்தில் ஆயிரக்கணக்கான உயிர்கள் சாம்பலாகின. இதில் உயிரிழந்தோரை விட, உயிரோடு இருந்தவர்களின் வேதனையே பெரிது. அந்த துயரமும், கொடூரமும் யாரும் மன்னிக்கவே முடியாத ஒரு மனிதப்பிழை. இந்த நாளில் மனதில் எழும் ஒரே கேள்வி, இந்த கொடுமையை பார்த்த பிறகும், உலகம் இன்னும் போருக்கு ஏன் ஆயத்தமாகவே இருக்கிறது?
News August 7, 2025
இனி BCCI RTI கீழ் வராது!

அரசு நிதியோ, உதவியோ பெறாத நிறுவனம் என்பதால், திருத்தப்பட்ட விளையாட்டு மசோதாவில், – BCCI-க்கு, RTI சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. RTI சட்டம் அரசு நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் அறிய உதவுகிறது. இதிலிருந்து BCCI விலக்கு பெற்றதால், இனிமேல், BCCI-ல் என்ன செய்கிறது, எவ்வளவு வருமானம், தேர்வு நடைமுறைகள் குறித்து அறிய முடியாது. Public game, private rules!
News August 7, 2025
வட மாநிலத்தவர் TN-ல் வாக்காளர்களாவது ஊழல்

வட மாநிலத்தவரை TN-ல் வாக்காளர்களாக சேர்ப்பது தவறானது எனவும், இதுவும் ஒரு வகை ஊழல்தான் என்றும் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் பேசிய அவர், உடுமலை SSI கொலை, கோவையில் போலீஸ் ஸ்டேஷனில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை என அடுத்தடுத்த சம்பவங்கள், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை காட்டுவதாக சாடினார். இது குறித்து உங்கள் கருத்து என்ன?