News March 23, 2025
வெற்றி தொடர்ந்தால் கோப்பை எங்களுக்கே: படிதார்

கேப்டனாக தனது முதல் போட்டி என்பதால் கொஞ்சம் அழுத்தமாக உணர்ந்ததாக, RCBக்கு முதல் வெற்றியைத் தேடித்தந்த ரஜத் படிதார் கூறியுள்ளார். இதேபோல், தொடர் வெற்றியை குவித்தால் கோப்பை தங்களுக்கே என்றார். கோலி போன்ற ஒரு வீரர் அணியில் இருப்பது அதிர்ஷ்டம் எனவும், அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பு என்றும் கூறினார். முன்னதாக KKRக்கு எதிரான நேற்றைய போட்டியில், படிதார் 34 ரன்கள் எடுத்திருந்தார்.
Similar News
News March 25, 2025
விஜய், பவன் கல்யாணின் குரு ஹுசைனி!

கராத்தே, வில் பயிற்சியாளரான ஹுசைனி பன்முக திறன் கொண்டவர். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் புன்னகை மன்னன் படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான பத்ரி திரைப்படத்தில் நடிகர் விஜய், பவன் கல்யாணுடன் பணியாற்றி, இருவருக்கும் தற்காப்புக் கலைக்கு குருவாக ஆனார். சாகும் தருவாயிலும் அந்த கலை மீது மிகுந்த பற்று வைத்திருந்தார். உடல் உறுப்புகளையும் தானம் செய்திருந்தார்.
News March 25, 2025
ஷிஹான் ஹுசைனி காலமானார்

பிரபல நடிகர் ஷிஹான் ஹுசைனி (60) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். ரத்த புற்று நோயால் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. சென்னை பெசன்ட் நகரில் உள்ள இல்லத்தில் அவரது உடல் இன்று மாலை வரை அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது. அவரது மறைவிற்கு ரசிகர்கள், திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News March 25, 2025
ராகு தோஷம் உள்ளவர்கள் செல்ல வேண்டிய ஆலயம்

திருமணஞ்சேரி திருத்தலம் திருமண தடைகளை நீக்க வல்லது. இந்த புனித தலத்தில் பூஜை செய்து வழிபட்டால் திருமணம் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம். ஜாதகத்தில் ராகு தோஷம் இருந்தால் அவர்கள் இங்குள்ள ராகு பகவானுக்கு அபிஷேகம் செய்ய அது நீங்கும். மேலும், புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் கூட இத்தலத்தில் உள்ள திருக்குளத்தில் நீராடி ராகு பகவானை மனதார வழிபட விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும் என்பது ஆன்றோர் வாக்கு.