News March 22, 2025
தொகுதிகள் குறைந்தால் அதிகாரம் பறிபோகும்

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல; நியாயமான மறுசீரமைப்பையே நாங்கள் கோருகிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொகுதிகள் என்பது வெறும் எண்ணிக்கை மட்டும் அல்ல; நமது அதிகாரம். மக்களின் பிரதிநிதிகள் குறைந்தால் நமது எண்ணங்களை சொல்வதற்கான வலிமையும் குறையும். சொந்த நாட்டிலேயே அதிகாரம் அற்றவர்களாக இந்த மறுவரையறை மாற்றிவிடும் என்றும் எச்சரித்துள்ளார்.
Similar News
News July 10, 2025
பாலியல் புகாரளித்த நடிகை… சிக்கும் சாமியார்

இந்திய வம்சாவளி நடிகை மலேசியாவில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. செபாங் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு நடிகை லிசால்லினி கனரன் சென்றபோது, அங்கிருந்த சாமியார் அவரது மார்பை தொட்டுள்ளார். பின்னர் நடிகை மீது நீரை தெளித்துள்ளார். ஜூன் 21-ல் நடந்த இந்த சம்பவம் குறித்து நடிகை லிசால்லினி போலீஸ் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, தலைமறைவான சாமியாரை போலீஸ் தேடி வருகிறது.
News July 10, 2025
தூங்கிக் கொண்டிருந்த 2 கேட் கீப்பர்கள் டிஸ்மிஸ்

அரக்கோணம் – செங்கல்பட்டு ரயில் வழித்தடத்தில் உள்ள லெவல் கிராசிங் (LC) பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது LC 40 & LC 44-ல் பணி நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்ததாக கார்த்திகேயன் & ஆஷிஷ்குமார் ஆகிய 2 கேட் கீப்பர்களும் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடலூர் ரயில் விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழப்புக்கு கேட் கீப்பர் தூங்கியதே காரணம் எனத் தெரிய வந்த நிலையில், ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.
News July 10, 2025
பாஜகவின் ஒரிஜினல் வாய்ஸில் இபிஎஸ்: ஸ்டாலின் சாடல்

பாஜகவின் டப்பிங் வாய்ஸில் பேசிக் கொண்டிருந்த இபிஎஸ் தற்போது ஒரிஜினல் BJP வாய்ஸிலேயே பேசுவதாக CM ஸ்டாலின் சாடியுள்ளார். திருவாரூரில் பேசிய அவர், அதிமுகவை மீட்க முடியாத இபிஎஸ் தமிழகத்தை மீட்பதாக கூறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஆட்சியில் அமர வைத்தவருக்கு அவர் துரோகம் செய்ததாகவும் CM விமர்சித்துள்ளார். கோயில் நிதியில் கல்லூரி திறப்பதற்கு பாஜகவினரே பேசுவதில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.