News April 15, 2024
ஆட்சி தொடர்ந்தால் வங்கியில் பணம் வரும்…

பாஜக ஆட்சி தொடர்ந்தால் உலக தரம் வாய்ந்த உள்கட்டமைப்பின் மையமாக இந்தியா மாறும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிரசாரம் செய்த அவர், பாஜகவின் தேர்தல் அறிக்கையை விவரித்தார். பாஜகவின் ஆட்சி தொடர்ந்தால் விண்வெளித் துறையில் இந்தியா பல்வேறு சாதனைகளை நிகழ்த்தும். விவசாயிகளின் வங்கிக் கணக்கில் கிசான் நிதி தொடர்ந்து வரும். முதியவர்கள் இலவச சிகிச்சை பெறலாம் என்றார்.
Similar News
News December 6, 2025
பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை.. ஆட்சியர் அறிவித்தார்

சென்னையில் உள்ள அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் இன்று செயல்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. டிச.2-ல் மழை காரணமாக அளிக்கப்பட்ட விடுப்பை ஈடு செய்யும் வகையில் பள்ளிகள் செயல்படவுள்ளன. புதன்கிழமை பாடவேளையை பின்பற்றி வகுப்புகள் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. டிச.2-ல் செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூருக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News December 6, 2025
புடினுக்கு PM மோடி அளித்த பரிசுகள்!

அரசு முறைப் பயணமாக இந்தியா வந்திருந்த அதிபர் புடினுக்கு PM மோடி பல்வேறு பரிசுகளை அளித்துள்ளார். முதல் நாளில் பகவத் கீதையை பரிசளித்த PM மோடி, அடுத்ததாக பாரம்பரியம் கொண்ட பல்வேறு மாநிலப் பொருட்களை கொடுத்துள்ளார். இதில் மகாராஷ்டிராவின் தயாரிக்கப்பட்ட வெள்ளிக் குதிரை, அசாம் டீ தூள், முர்ஷிதாபாத் டீ செட், மார்பிள் செஸ் செட், காஷ்மீர் குங்குமப்பூ உள்ளிட்டவை அடங்கும். போட்டோக்களை SWIPE செய்து பாருங்க..
News December 6, 2025
தொடரை கைப்பற்றுமா இந்தியா?

இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான கடைசி ODI போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. Vizaz-ல், இரவுநேரம் அதிக பனிப்பொழிவு இருக்கும் என்பதால் டாஸ் வெல்லும் அணி கண்டிப்பாக பந்துவீச்சை தேர்வு செய்யும். இந்தியாவின் பேட்டிங் வலுவாக இருந்தாலும், பந்துவீச்சில் முன்னேற்றம் காண வேண்டிய அவசியம் உள்ளது. SA-வும் கடும் சவால் அளிப்பதால் போட்டி அனல் பறக்கும்.


