News April 8, 2025
திமுக அரசு இதை செய்தால் ₹468.50க்கு சிலிண்டர்

சிலிண்டர் விலை உயர்வை ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில், திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் சிலிண்டருக்கு ₹100 மானியம் வழங்கப்படும் என அறிவித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் கடந்தும் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இப்போதே திமுக அரசு ₹100 மானியம் கொடுத்தால், உஜ்வாலா பயனளிகளுக்கு ₹300 மானியம் உட்பட ஏழைகளுக்கு ₹468.50க்கு சிலிண்டர் கிடைக்கும் என பாஜகவினர் பதிலடி கொடுக்கின்றனர்.
Similar News
News April 17, 2025
பைக் காதலர்களே இதுதான் சரியான நேரம்! ₹25,000 சலுகை

பைக் காதலர்களுக்கு சர்ப்ரைஸ் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆம்! Ninja 300 மாடல் பைக்குகளுக்கு ₹25,000 சிறப்பு தள்ளுபடியை Kawasaki நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சலுகை வரும் மே மாதம் வரை மட்டுமே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தள்ளுபடிபோக Ninja 300 மாடல் ₹3.18 லட்சத்திற்கு (EX-Showroom) விற்பனை செய்யப்படுகிறது.
News April 17, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஏப்ரல் 16- சித்திரை- 03 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 12:00 AM – 1:00 AM ▶கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1 : 30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6 : 00 AM – 7:30 AM ▶ குளிகை: 9 : 00 – 10 : 30 AM ▶ திதி: பஞ்சமி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶ பிறை: தேய்பிறை
News April 17, 2025
மாநிலம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பஸ்

புனித வெள்ளி மற்றும் சனி, ஞாயிறு வார விடுமுறையையொட்டி, பொதுமக்கள் வசதிக்காக தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், நாகை, தஞ்சை வேளாங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஊர்களுக்கும், மற்ற முக்கிய நகரங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.