News August 29, 2025
சரக்கு அடிச்சா சொட்டை விழும்… எச்சரிக்கும் ஆய்வு!

Soft drinks (அ) மது அதிகம் குடிப்பவரா? அப்படியானால், உங்களுக்கு தலைமுடி மெலிவதும், உதிர்வதும் அதிகரிக்கும். இதனால் வழுக்கை விழும் வாய்ப்பும் அதிகம் என்கின்றது ஓர் ஆய்வு முடிவு. உடலில் சர்க்கரை, ஆல்கஹால் அதிகமாகும் போது, தோலில் எண்ணெய் சுரப்பு அதிகமாகிறது. இதனால் கிருமிகள் அதிகரித்து முடி உதிர்கிறதாம். புரோட்டீன், இரும்பு, வைட்டமின் D சத்துகள் நிறைந்த உணவுகள், முடி உதிர்வை தடுக்கஉதவும். SHARE IT
Similar News
News September 1, 2025
1 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 2GB இலவசம்

சுதந்திர தின சலுகையாக அறிவிக்கப்பட்ட ‘BSNL Freedom Offer’ நீட்டிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் ₹1 ரீசார்ஜ் செய்தால் 30 நாள்களுக்கு அதிவேக 4ஜி டேட்டா(2 GB), 100 SMS மற்றும் அன்லிமிடெட் அழைப்புகளை மேற்கொள்ளலாம். முன்னதாக, இந்த ஆஃபர் நேற்றுடன் (ஆக.31) நிறைவடைந்த நிலையில், கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு உங்களுக்கு அருகில் உள்ள BSNL மையங்களை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News September 1, 2025
முதல்வரின் வெளிநாடு பயணம்: நயினார் சாடல்

CM ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தை நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார். தனது X தள பதிவில் தமிழகம் போன்ற அதிக GDP கொண்ட மாநிலத்திற்கு, ₹ 3,200 கோடி முதலீடெல்லாம் யானை பசிக்கு சோளப்பொரியே என தெரிவித்துள்ளார். 6 முறை பயணத்தில் ₹ 18,000 கோடி முதலீடுகளை மட்டுமே ஈர்த்துள்ளதாகவும், 95% ஒப்பந்தங்கள் காகித அளவிலேயே நின்றுவிட்டதாகவும், இது மக்கள் பணத்தில் நடக்கும் மோசடி என அவர் சாடியுள்ளார்.
News September 1, 2025
சற்றுமுன்: பிரபல இயக்குநர் காலமானார்

கன்னட திரையுலகில் பிரபல இயக்குநர் SS டேவிட்(55) திடீர் மாரடைப்பால் காலமானார். பெங்களூருவில் ஒரு மருந்து கடையில் நின்றிருந்த அவர், திடீரென மயக்கமடைந்து சரிந்தார். உடனடியாக ஹாஸ்பிடல் அழைத்து சென்றும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. கன்னட திரையுலகில் இயக்குநராகவும் கதாசிரியராகவும் ஜொலித்த இவர் இயக்கிய படங்களில் ஹாய் பெங்களூர், தைரியா, ஜெய் ஹிந்த் ஆகியவை முக்கியமானவை. RIP