News August 21, 2024
ரயிலில் உங்கள் சீட்டில் வேறொருவர் அமர்ந்திருந்தால்..

ரயிலில் நீங்கள் முன்பதிவு செய்த சீட்டுகளில் யாராவது அமர்ந்து கொண்டு, நகர மாட்டேன் என அடம்பிடித்தால் டென்ஷன் ஆக வேண்டியதே இல்லை. ரயில்வே Help Line எண்ணான 139-க்கு ஒரு மெசேஜ் தட்டினால் போதும். அதில் உங்கள் சீட் நம்பரையும், PNR நம்பரையும் பிறகு seat occupied by another passenger என டைப் செய்து அனுப்பினால் போதும். 10 நிமிடத்தில் அங்கு வரும் டிடிஆர், சம்பந்தப்பட்டவரை அன்பாக வழியனுப்பி வைப்பார்.
Similar News
News March 23, 2026
சூரியன் கிட்ட போனா பொசுங்கி விடுவார்கள்: OPS

கோள்களில் மிகவும் சக்திவாய்ந்த சூரியன் தான் உலகத்தை ஆள்வதாக OPS பேசியுள்ளார். தொடர்ந்து திமுகவை பற்றி பெருமையாக பேசிய அவர், ’பல லட்சம் கிமீ தொலைவில் உள்ள சூரியன் பக்கத்தில் சென்றால் என்ன ஆகும் தெரியுமா? பொசுங்கிவிடுவார்கள்’ என்றார். மேலும், சூரியனால் தான் மனிதர்களும், உயிர்களும் வாழ முடிகிறது எனவும் அப்படிப்பட்ட சூரியனை தான் திமுகவின் சின்னமாக அண்ணா வைத்திருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
News March 23, 2026
பெற்றோரை கவனிக்காமல் விட்டால் ₹10,000 Salary Cut

பாசத்தையும், நேசத்தையும் ஊட்டி வளர்த்த பெற்றோரை முதியோர் இல்லத்தில் தள்ளும் அவல நிலை உள்ளது. இதை தடுக்க பெற்றோரை கவனிக்காத அரசு ஊழியர்களின் சம்பளத்திலிருந்து 15% (அ) ₹10,000 பிடித்தம் செய்து, அதை பெற்றோரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என தெலங்கானா அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்த பட்ஜெட் தொடரிலேயே இச்சட்டத்தை நிறைவேற்ற தெலங்கான அரசு தீவிரம் காட்டுகிறது. TN-ல் இது அமலுக்கு வந்தால்..?
News March 23, 2026
BREAKING: துரந்தர் 2 படத்திற்கு தடையா?

‘துரந்தர் 2’ படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், படத்தில் ஒரு சார்பான கருத்து உள்ளதாக சுட்டிக்காட்டி, படத்துக்கு தமிழகத்தில் தடை விதிக்கக் மனுவில் கோரப்பட்டுள்ளது. வெளியான 3 நாள்களில் ₹500 கோடியை வசூலித்த ‘துரந்தர் 2’ படம் பாகிஸ்தானில் உளவு பார்க்கும் இந்தியரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது.


