News July 10, 2025
‘றெக்க மட்டும் இருந்தா தேவதை மச்சான்’

பிரியா பவானி ஷங்கர் மாடர்ன் டிரஸ்ஸில் மயக்கும் போட்டோஷூட் நெட்டிசன்களை கிறங்கடித்துள்ளது. ‘பேசும் பார்வை கண்களின் நயம், பிரியாவின் நிழலில் பொழியும் நயம்’ என கவிதை தான் எழுத தோன்றுகிறது. ‘இவ்வளோ அழகா இருக்குறது ரொம்ப தப்பு மேடம்’ என கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது அவர் ‘டிமான்டி காலனி 3’ படத்தில் நடித்து வருகிறார். உங்களுக்கு பிடிச்ச பிரியா பவானி ஷங்கர் படம் எது?
Similar News
News July 10, 2025
சிறுநீரில் ரத்தம் வருகிறதா? இது காரணமாக இருக்கலாம்

சிறுநீரில் ரத்தம் கலந்து வருவது பின்வரும் பாதிப்புகளின் ஏதேனும் ஒன்றின் அறிகுறியாக இருக்கலாம்: *சில உணவுகளின் நிறம் சிறுநீரை சிவப்பாக்கலாம். இதனால் ஆபத்தில்லை *சிறுநீர்ப்பை தொற்று *சிறுநீரக தொற்று *சிறுநீரகக் கல் * சிறுநீரக அழற்சி *சிக்கில் செல் அனீமியா *சில வகை மருந்துகள் உட்கொள்வதால் *அரிதாக கேன்சர் அறிகுறி. சிறுநீரில் ரத்தம் கலந்து வருவதாக தெரிந்தால், உடனே டாக்டரை அணுகுவதே சிறந்தது.
News July 10, 2025
ஒரே இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர் தெரியுமா?

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர் யார் என அனைவருக்கும் தெரியுமா என்பது சந்தேகமே. இந்திய அணி இளம் வீரரான ஜெய்ஸ்வால்தான், அந்த சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார். இங்கிலாந்துக்கு எதிராக கடந்த ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில் அவர் 12 சிக்சர்களை விளாசினார். இதுவே இந்திய வீரர் ஒருவர் ஒரு இன்னிங்சில் அடித்த அதிகபட்ச சிக்சர்கள் ஆகும்.
News July 10, 2025
உள்நாட்டு பாதுகாப்பில் TN போலீஸ் முன்னிலை: CM

உள்நாட்டு பாதுகாப்பில் நாட்டிலேயே தமிழ்நாடு போலீசார் முன்னணி வகிப்பதை மீண்டும் ATS நிலைநாட்டியுள்ளதாக CM ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். 30 ஆண்டுகளாக யாருக்கும் பிடிபடாமல் இருந்த அபுபக்கர் சித்திக் உட்பட 3 முக்கிய தீவிரவாதிகளை பிடித்த ATS-க்கு ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். <<17015271>>கோவை குண்டு வெடிப்பு<<>> குற்றவாளி சாதிக் சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.