News November 15, 2024

ஆண்கள் ஜீன்ஸ் அணிந்தால்… இவ்வளவு பிரச்சனையா?

image

இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால், ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கை குறைவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். இறுக்கமான ஜீன்ஸ், பேன்ட், உள்ளாடைகள் அணிவதால் சிறுநீர்ப்பாதை தொற்று, விதைப்பைகள் முறுக்கிக் கொள்வது, சிறுநீர்ப் பை பலவீனம் உள்ளிட்ட நீண்டகால பாதிப்புகள் ஏற்படும் ஆபத்து அதிகரிப்பதாக ஆய்வு கூறுகிறது. ஆகவே, இறுக்கிப் பிடிக்காத, சற்று தளர்வான ஆடைகளை அணியுங்கள். ஸ்டைலை விட லைஃப் முக்கியம் பாஸ்!

Similar News

News August 27, 2025

மீண்டும் அதிமுகவில் இணைய முடியாது.. EPS அதிரடி முடிவு

image

பாஜக கூட்டணியிலிருந்து விலகிய <<17528723>>OPS<<>>, நிபந்தனையின்றி அதிமுகவில் இணைய தயார் கூறியதற்கு, ‘இணைக்க மாட்டோம்’ என்று கடந்த வாரம் EPS திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இந்நிலையில், நேற்று ஒன்றிணைய வேண்டும் என EPS-க்கு மீண்டும் அழைப்பு விடுத்தார். இதுகுறித்து மூத்த தலைவர்கள் EPS-யிடம் ஆலோசிக்கையில், அவரை நீக்கியது நீக்கியதுதான், மீண்டும் இணைப்பு குறித்து பேச வேண்டாம் என EPS முற்றுப்புள்ளி வைத்துவிட்டாராம்.

News August 27, 2025

ஜெயிலர் 2-ல் இணைந்த SJ சூர்யா

image

நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ பட ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. இந்நிலையில், இதில் SJ சூர்யா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் துவங்கவுள்ளதாம். தற்போது ‘Killer’ படத்தின் முதற்கட்ட ஷூட்டிங்கை SJ நிறைவு செய்துள்ளாராம். ஏற்கெனவே, இப்படத்தில் ஃபஹத் ஃபாசில், ‘வீர தீர சூரன்’ படத்தில் மிரட்டியிருந்த சுராஜ் ஆகியோரும் இணைந்துள்ளனர். ஜெயிலர் 2 மிரட்டுமா?

News August 27, 2025

Health Tips: நாக்கில் இந்த அறிகுறிகள் இருக்கா? கவனம்!

image

எப்போதாவது நாக்கில் வலி/ரத்தப்போக்கு ஏற்பட்டிருக்கிறதா? அப்படி இருந்தால் அது நாக்கு புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம் என டாக்டர்கள் சொல்கின்றனர். இதனை கண்டறிய இன்னும் சில அறிகுறிகள் இருக்கின்றன. ▶நாக்கில் 2 வாரங்களுக்கு மேல் நீடிக்கும் புண்கள் ▶சிவப்பு/வெள்ளை புள்ளிகள் தோன்றுவது ▶விழுங்குவதில்/பேசுவதில் சிரமம் ▶நாக்கில் உணர்ச்சி இல்லாமல் போவது இதன் அறிகுறிகளாக கருதப்படுகின்றன.

error: Content is protected !!