News March 23, 2024
டெல்லி முதல்வராக கெஜ்ரிவால் தொடர்ந்தால்?

EDயால் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், அந்தப் பதவியில் நீடித்தால், ஆம் ஆத்மி கட்சி பல்வேறு சிக்கல்களை சந்திக்கும் என அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர். முறைகேடு புகாரில் கைதானதால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என சட்டவிதிகள் இல்லை என்றாலும், குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு அது வழிவகுக்கும் எனக் கூறிய நிபுணர்கள், மத்திய அரசும் அதனை துரிதப்படுத்தும் என எச்சரித்துள்ளனர்.
Similar News
News December 26, 2025
திமுக அரசின் பாசிசப் போக்கு வெட்கக்கேடானது: EPS

தமிழகத்தில் <<18674972>>இடைநிலை ஆசிரியர்கள் கைது <<>>செய்யப்பட்டதற்கு EPS கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்று வாக்குறுதி அளித்துவிட்டு, நான்கரை ஆண்டுகளாக ஆசிரியர்களை போராட விட்டு வேடிக்கை பார்க்கும் திமுக அரசின் பாசிசப் போக்கு வெட்கக்கேடானது என அவர் விமர்சித்துள்ளார். ஆசிரியர்கள் மீதான அராஜகப் போக்கை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
News December 26, 2025
குளிர்கால சோர்வை விரட்டும் 7 யோகாசனங்கள்!

குளிர்காலம் வந்துவிட்டாலே பலருக்கும் ஒருவித பருவகால மனச்சோர்வு வந்துவிடும். இந்நிலையில் குளிர்காலத்திலும் நம்மை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள இந்த 7 யோகாசனங்கள் உதவும். 1.உஸ்ட்ராசனம் 2.புஜங்காசனம் 3.வஜ்ராசனம் 4.சர்வாங்காசனம் 5. மத்ஸ்யாசனம் 6.மர்ஜாராசனம் 7.இயக்க-மூச்சுப் பயிற்சிகள். இவை மனச்சோர்வை போக்குவது மட்டுமின்றி, உடல் ஆரோக்கியம் மற்றும் சமநிலை மீட்டெடுக்கவும் உதவுகின்றன.
News December 26, 2025
விஜய்யுடன் பணியாற்றுவது கொடுப்பினை: KAS

நான் சேர்ந்த இடம் (தவெக), கோட்டைக்கு செல்கிற இடம் என செங்கோட்டையன் கூறியுள்ளார். விஜய் தன்னிடம் மனம் திறந்து பேசியதாக கூறிய அவர், இப்படிப்பட்ட தலைவரோடு பணியாற்ற, தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் எனவும் புகழ்ந்தார். மேலும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவோடு பணியாற்றிய தனக்கு, தற்போது அடுத்த தலைமுறை தலைவரான விஜய்யுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


