News February 23, 2025
இந்தியாவுல நடந்திருந்தா நிலைமையே வேற!

உலகளவில் அதிக மக்களால் பார்க்கப்படும் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா – பாகிஸ்தான் போட்டியும் ஒன்று. 2011 உலகக் கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் விளையாடிய போட்டியை 50 கோடி மக்கள் பார்த்ததாக புள்ளி விவரங்கள் உண்டு. ஆனால், இன்றைய போட்டியில் மைதான இருக்கைகள் காலியாக உள்ளன. துபாயில் நடைபெறும் இப்போட்டி, இந்தியாவிலோ அல்லது பாகிஸ்தானிலோ நடந்திருந்தால் நிலைமையே வேற.
Similar News
News February 23, 2025
அடிதடி வழக்கு: பாஜக எம்எல்ஏக்கு 3 மாதம் சிறை

பீகார் பாஜக எம்எல்ஏக்கு அடிதடி வழக்கில் 3 மாதம் சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அலிநகர் தொகுதி எம்எல்ஏவான மிஸ்ரி லால் மற்றும் அவரின் உதவியாளர், உமேஷ் என்பவரை தகராறின்போது தாக்கி மண்டையை உடைத்ததாக வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் மிஸ்ரி லால், உதவியாளருக்கு 3 மாதம் சிறை, தலா ரூ.500 அபராதம் விதித்து கோர்ட் உத்தரவிட்டது. எனினும், பிணைத் தொகையில் ஜாமீன் அளித்தது.
News February 23, 2025
இதில் எது சிறுத்தை தெரியுமா?

இந்த மூன்றில் முதலில் இருக்கும் Leopardஐதான் நாம் பொதுவாக சிறுத்தைப் புலிகள் என்று அழைக்கிறோம். இவைதான் இந்தியா முழுவதும் பரவியிருக்கின்றன. இரண்டாவதாக இருக்கும் சிவிங்கிப் புலி (Cheetah) ஆப்பிரிக்க நாடுகளில் வாழ்பவை. இவைதான் உலகின் வேகமான விலங்கு. மூன்றாவதாக இருக்கும் ஜாகுவார்கள் அமெரிக்க நாடுகளில் அதிகமாக வாழ்கின்றன. இந்த மூன்றில் உங்களுக்கு பிடித்த விலங்கு எது?
News February 23, 2025
51ஆவது சதம் விளாசினார் விராட் கோலி

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதின. இதில் 3ஆவது விக்கெட்டுக்கு காேலி களமிறங்கினார். முதலில் சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்து அபாரமாக விளையாடினார். பின்னர் கில் அவுட்டாகி வெளியேறவே, ஸ்ரேயஸ் அய்யருடன் ஜோடி சேர்ந்தார். கடைசிவரை களத்தில் நின்ற கோலி, 111 பந்துகளில் 100 ரன்கள் விளாசினார். இதில் 7 பவுண்டரிகள் அடங்கும். இது ODIஇல் காேலியின் 51ஆவது சதம் ஆகும்.