News April 15, 2024
வாயை திறந்தால் பொய் மட்டுமே பேசுகிறார்

பொய் சொல்வதில் போட்டி வைத்தால் பிரதமர் மோடி முதலிடம் பிடிப்பார் என நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் சிபிஎம் வேட்பாளரை ஆதரித்து அவர் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியா சர்வ நாசமாக போய்விடும். பாஜக ஆட்சி மக்களுக்கானது அல்ல, அதானி அம்பானிகளுக்கானது என்ற அவர், பொய் சொல்வதில் இந்திய அளவில் மோடியும், தமிழக அளவில் அண்ணாமலையும் முதலிடம் பெறுவார்கள் என்றார்.
Similar News
News September 18, 2025
தவெகவில் இணைகிறேனா? அதிகாரப்பூர்வ விளக்கம்

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி உள்ளிட்டோர் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து பேசிய புகழேந்தி, தான் தவெகவில் இணையவில்லை. ஆனால், எம்ஜிஆர், அண்ணா போன்ற திராவிட தலைவர்களை முன்னிலைப்படுத்தும் விஜய்யை தூக்கிப்பிடிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். விஜய்யின் தாக்கம் பயங்கரமாக இருக்கிறது; அவர் பின்னால் செல்லும் கூட்டம் பலருக்கு வேட்டாக மாறும் என்றார்.
News September 18, 2025
கால் வலி நீங்க காலையில் இந்த யோகா பண்ணுங்க!

சுப்த பாதாங்குஸ்தாசனம் செய்வது முதுகு, இடுப்பு & கால்தசைகளை வலுவாக்கும்.
*கால்களை நேராக நீட்டி படுக்கவும் *வலது காலை மடித்து, மார்பு வரை கொண்டு வந்து, வலது பெருவிரலால் பிடித்து கொள்ளவும் *இப்போது காலை மேல் நோக்கி நேராக நீட்டவும் *உதவிக்கு யோகா பட்டையை பயன்படுத்தலாம் *இந்தநிலையில், 15- 20 விநாடிகள் வரை இருந்துவிட்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும். இதே போல, காலை மாற்றி செய்யவும். SHARE IT.
News September 18, 2025
இனி அவர் முகமூடியார் பழனிசாமி: TTV

எடப்பாடி பழனிசாமியை இனிமேல் முகமூடியார் பழனிசாமி என அழைக்க வேண்டும் என்று TTV தினகரன் விமர்சித்துள்ளார். EPS செய்யும் துரோகத்தை சிலர் ராஜதந்திரம் என நினைப்பதாகவும், MGR, ஜெயலலிதா வெற்றிகண்ட இரட்டை இலை சின்னத்தை வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்ற பார்ப்பதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், என்னதான் பண பலம், படை பலம் இருந்தாலும் வரும் தேர்தலில் தோல்வியை தழுவுவது உறுதி எனவும் தெரிவித்துள்ளார்.