News April 19, 2025
அது போன்ற படங்கள் எடுத்தால் தியேட்டர்கள் எரிக்கப்படும்: RM

‘பம்பாய்’ போன்ற படத்தை இன்று எடுக்க முடியாத சூழல் நிலவுவதாக ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் தெரிவித்துள்ளார். அது போன்ற படங்களை வெளியிட்டால், தியேட்டர்கள் கொளுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் சகிப்புத்தன்மை மிகவும் குறைந்துவிட்டதாகவும் அவர் கவலை எச்சரித்துள்ளார். மேலும், இந்தியாவின் சூழல் நிலையற்றதாகி விட்டதாகவும், மதம் மிகப்பெரிய பிரச்னையாகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 5, 2026
பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் உரிமம் இத்தனை கோடியா?

விஜய்யின் ‘ஜனநாயகன்’ பாலையாவின் பகவந்த் கேசரியின் ரீமேக் என்பது டிரெய்லர் மூலம் உறுதியானது. இதை H வினோத் எப்படி எடுத்திருப்பார் என SM-ல் பெரும் விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனிடையே ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் உரிமையை ₹4 கோடிக்கு ‘ஜனநாயகன்’ படக்குழு வாங்கியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. பாலையாவின் பார்முலா விஜய்க்கு வொர்க் அவுட் ஆகுமா?
News January 5, 2026
காரைக்குடி தொகுதியில் போட்டியா? சீமான்

பல தொகுதிகளுக்கான நாம் தமிழர் வேட்பாளர்களை சீமான் அறிவித்துவிட்டார். இதனிடையே அவர் காரைக்குடியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது திருச்சி மாநாட்டில், தான் போட்டியிடும் தொகுதி குறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்தார். கூட்டணி இல்லாமல் வெற்றி பெற முடியாது என்பது பொய் என்றும், ஜெயலலிதா, கெஜ்ரிவால் ஆகியோர் தனித்து நின்று வெற்றி பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
News January 5, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 5, மார்கழி 21 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:30 AM – 7:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்:10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: துவிதியை ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்


