News March 24, 2025

கல்வி RSS கைக்கு சென்றால் நாடு அழிந்துவிடும்: ராகுல்

image

கல்வியை RSS கட்டுப்பாட்டில் எடுத்தால் இந்தியாவின் எதிர்காலம் அழிந்துவிடும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான போராட்டத்தில் பேசிய அவர், RSS கையில் கொஞ்சம் கொஞ்சமாக கல்விமுறை செல்வதாகவும், அப்படி சென்றால் யாருக்கும் வேலை கிடைக்காது எனவும் எச்சரித்தார். வேலையின்மை குறித்து பிரதமர் பேசுவதே இல்லை என்றும் அவர் விமர்சித்தார்.

Similar News

News September 16, 2025

தம்பதியர் பிணைப்பை வலுவாக்கும் முத்தம்

image

அன்புடன் முத்தமிடும் போது oxytocin, dopamine மற்றும் serotonin ஹார்மோன்களை மூளை சுரக்கிறது. இது மகிழ்ச்சியையும் திருப்தி உணர்வையும் ஏற்படுத்துகிறது. இதனால் பாசப் பிணைப்பும் வலுவடைகிறது. மனம் ரிலாக்ஸாகிறது. காதலர்கள், தம்பதியர் முத்தமிடும் போது, பாலுணர்வை தூண்டும் ஹார்மோன் அதிகம் சுரக்கிறது. இதனால் தாம்பத்ய இன்பம் அதிகரிப்பதுடன், காதலும் பிணைப்பும் வலுப்படுவதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

News September 15, 2025

ராசி பலன்கள் (16.09.2025)

image

➤மேஷம் – சாந்தம் ➤ரிஷபம் – தடங்கல் ➤மிதுனம் – வெற்றி ➤கடகம் – நட்பு ➤சிம்மம் – கோபம் ➤கன்னி – அச்சம் ➤துலாம் – பெருமை ➤விருச்சிகம் – சிரமம் ➤தனுசு – சோதனை ➤மகரம் – முயற்சி ➤கும்பம் – அனுகூலம் ➤மீனம் – புகழ்.

News September 15, 2025

இனி சாதாரண முன்பதிவுக்கும் ஆதார் கட்டாயம்

image

கடந்த ஜூலை முதல், தட்கல் டிக்கெட் முன்பதிவிற்கு ஆதார் அங்கீகாரம் (Aadhaar authentication) கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில், சாதாரண முன்பதிவிற்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சாதாரண முன்பதிவு தொடங்கும் முதல் 15 நிமிடங்களுக்கு ஆதார் அங்கீகாரம் பெற்ற பயனர் ஐடி உள்ளவர்கள் மட்டுமே IRCTC வெப், ஆப்பில் முன்பதிவு செய்ய முடியும். தற்போது 60 நாள்களுக்கு முன்பு சாதாரண டிக்கெட் முன்பதிவு ஓபன் ஆகிறது.

error: Content is protected !!