News August 24, 2024
பாஜகவை நெருங்கினால் திமுக கூட்டணியில் இருந்து விலகல்: VC

ஆளுநர் விருந்து, கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவில் திமுக, பாஜக நெருக்கம் காட்டியது குறித்து விசிக துணை பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், திமுக ஏன் பாஜக கூட்டணியை நாட வேண்டும், அப்படி நாடினால் கூட்டணியில் உள்ள பிற கட்சிகளும் விலகிவிடும் என்றார். திமுக கூட்டணியை விட்டு வெளியேறி, அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் என்னவாகும் எனவும் வினவினார்.
Similar News
News December 16, 2025
கேரளத்தின் வெற்றி TN-ல் எதிரொலிக்கும்: நயினார்

கேரளாவின் திருவனந்தபுரம் மாநகராட்சியை <<18551942>>பாஜக <<>>கைப்பற்றி இடதுசாரிகளுக்கு அதிர்ச்சியளித்தது. இந்நிலையில் கேரளத்தில் பெற்ற வெற்றி விரைவில் தமிழகத்திலும் எதிரொலிக்கும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான மனநிலை மக்களிடம் காணப்படுவதாகவும், அதை பாஜக சரியாக பயன்படுத்த வேண்டும் எனவும் தொண்டர்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
News December 16, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கொடுங்கோன்மை ▶குறள் எண்: 551 ▶குறள்:
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து.
▶பொருள்: அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும்.
News December 16, 2025
சுந்தர் பிச்சை பொன்மொழிகள்

*உங்கள் கனவுகளை நம்பி, அவற்றை விரும்பி வாழுங்கள். அதுவே வாழ்க்கையின் உண்மையான மகிழ்ச்சி. * உங்கள் திறன்களை தினமும் வளர்த்து கொள்ளுங்கள், தினந்தோறும் புதியது ஒன்றை கற்றுக்கொள் முயற்சி செய்யுங்கள். *உண்மையான தலைவர்கள் என்பவர்கள் தங்கள் சொந்த வெற்றியை பற்றி மட்டுமல்ல, சுற்றியுள்ளவர்களின் வெற்றியைப் பற்றியும் சிந்திப்பார்கள். *ஆர்வத்தோடு கற்றுக்கொள்வது உங்கள் வெற்றிக்கு வழி காட்டும்.


