News February 2, 2025
பின்தங்கிய மாநிலம் என அறிவித்தால் நிதி

கேரளா தன்னை பின் தங்கிய மாநிலம் என அறிவித்தால், அதிக நிதி ஒதுக்குவோம் என மத்திய அமைச்சர் குரியன் பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது. பட்ஜெட்டை CPM விமர்சித்ததால், அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஆனால், கேரளா எப்போதும் பின்தங்காது என CPM பதிலடி கொடுத்துள்ளது. எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பாரபட்சமாக நிதி ஒதுக்குவதாக ஹ்க்ஜ்ஹ்க்ஜ்ஹ்
Similar News
News March 20, 2026
ஈரான் போருக்காக மேலும் ₹18 லட்சம் கோடியை இறைக்கும் US

ஈரானுடனான போரைத் தொடர்வதற்காக, பென்டகன் அமெரிக்க காங்கிரஸிடம் 200 பில்லியன் டாலர் (₹18 லட்சம் கோடி) கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஈரானியப் பொருளாதாரத்தின் (356 பில்லியன் டாலர்) பாதிக்கும் மேலாகும். போரின் முதல் வாரத்திலேயே அமெரிக்கா 11 பில்லியன் டாலருக்கும் அதிகமாக செலவிட்டது. போருக்காக அமெரிக்கா அதிகப்படியாக செலவிடுவதற்கு அந்நாட்டின் எதிர்க்கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
News March 20, 2026
கவிஞர் கண்ணதாசன் பொன்மொழிகள்

*நிம்மதி என்பது பிறர் கொடுப்பது அல்ல, நாமே ஏற்படுத்திக் கொள்வது. *முதலில் யார் மீதாவது குற்றம் சாட்ட விரும்பினால், உன் மீதே சாட்டு. *கருணை பொங்கும் உள்ளம், அது கடவுள் வாழும் இல்லம். *உண்மையைச் சொல்பவன் உறவை இழக்கிறான். உறவை விரும்புபவன் உண்மையை இழக்கிறான். *மனிதனுடைய திறமை பெரிதல்ல, கிடைக்கின்ற சந்தர்ப்பமே அவனைப் பிரகாசிக்கச் செய்கிறது.
News March 20, 2026
கத்தார் மீதான தாக்குதலுக்கு PM மோடி கண்டனம்

கத்தாரின் <<19423057>>எரிசக்தி நிறுவனங்கள்<<>> மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு PM மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கத்தார் PM ஷேக் தமிம் பின் ஹமாத்திடம் அவர் தொலைபேசியில் உரையாற்றியுள்ளார். அப்போது, அங்குள்ள இந்தியர்களுக்கு ஆதரவு அளித்ததற்கு நன்றி கூறிய PM மோடி, அப்பகுதியில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் மீண்டும் நிலவ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


