News October 7, 2025
செல்போன் Radiation அதிகரித்தால்..

செல்போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுக்கள் உடல் செல்களை வெப்பமாக்குகின்றன. SAR (Specific Absorption Rate) அறிவுரையின்படி, கதிர்வீச்சு ஒரு கிலோகிராமுக்கு 1.6 வாட்களுக்கு மேல் இருக்கக்கூடாது. உங்கள் போனிலுள்ள Radiation-ஐ செக் பண்ண, ‘*#07#’ டயல் பண்ணுங்க. கதிர்வீச்சு தோல் நோய்களை ஏற்படுத்துகிறது. மேலும், மன அழுத்தம், மன பதட்டம் மற்றும் தூக்கமின்மை ஏற்படலாம். இத்தகவலை அனைவருக்கும் பகிரவும்.
Similar News
News October 7, 2025
கரூர் துயரம்.. நேரில் ஆறுதல் கூறிய நடிகை அம்பிகா

கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நடிகை அம்பிகா ஆறுதல் கூறினார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தான் இங்கு வந்ததில் எந்த அரசியலும் இல்லை; யாரையும் ஆதரித்தோ, எதிர்த்தோ பேச வரவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்காக வந்திருக்கிறேன் எனத் தெரிவித்தார். மேலும், குழந்தைகளை அழைத்து வந்தது பெற்றோர்களின் தவறு; இதுபோன்ற துயரம் இனி நடக்காமல் இருக்க சரியான நடவடிக்கை தேவை என்றார்.
News October 7, 2025
மேனேஜர் போன் பண்ணி தொல்லை கொடுக்கிறாரா?

எக்ஸ்ட்ரா நேரம் வேலை செய்துவிட்டு வீட்டுக்கு வந்தாலும், ஆபிஸில் இருந்து உங்களுக்கு போன் வருவதுண்டா? இந்த தொல்லைக்கு முடிவு கட்ட, ‘Right to disconnect’ உரிமை கோரும் ஒரு தீர்மானத்தை கேரள MLA ஜெயராஜ், சட்டமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். வீட்டிற்கு சென்றபின், ஊழியர்களுக்கு போன், இமெயில், மெசேஜ், மீட்டிங் என எந்த ஒரு தொல்லையும் தரக்கூடாது என இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபற்றி உங்க கருத்து?
News October 7, 2025
கரூர் துயரம்: சற்றுமுன் அதிரடி கைது

கரூர் துயர சம்பவத்தில் அவதூறு கருத்து கூறியதாக, ஓய்வுபெற்ற காவல் அதிகாரி வரதராஜனை சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கரூர் துயர சம்பவ வழக்கில் விஜய் குறித்து ஐகோர்ட் நீதிபதியின் கருத்தை கடுமையாக விமர்சித்து பேசிய அவர், விஜய்க்கு ஆதரவாகவும், ஆளும் திமுக அரசை சாடியும் இருந்தார். இந்நிலையில், அவரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.