News December 22, 2024

அதிமுக ஆட்சியமைத்தால்.. இபிஎஸ் கொடுத்த வாக்குறுதி!

image

2026இல் ADMK ஆட்சியமைத்தால், தலித் கிறிஸ்தவர்களுக்கு அனைத்து சலுகைகளும் கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என இபிஎஸ் உறுதியளித்துள்ளார். கீழ்ப்பாக்கத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய அவர், திமுக அரசு சிறுபான்மை மக்களுக்காகச் சிறு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை எனச் சாடினார். மேலும், தலித் கிறிஸ்தவர்களுக்கு அனைத்து சலுகைகள் கிடைக்க வேண்டும் என்பதே அதிமுகவின் கொள்கை என்றும் கூறினார்.

Similar News

News July 6, 2025

திருச்செந்தூர் குடமுழுக்கு: புனித நீர் தெளிக்க ட்ரோன்

image

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நாளை (ஜூலை 7) காலை 6:15 முதல் 6:50 மணிக்குள் நடைபெறுகிறது. 10 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பாதுகாப்பு மற்றும் பிற ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ட்ரோன் மூலம் 20 இடங்களில் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News July 6, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஜூலை 6) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News July 6, 2025

புளூடூத் யூஸ் பண்றீங்களா? எச்சரிக்கை!

image

புளூடூத் ஆடியோ சாதனங்கள் ஹேக் செய்யப்பட வாய்ப்புள்ளதாக Indian Cyber ​​Security Agency எச்சரித்துள்ளது. புளூடூத் மூலம் ஸ்பீக்கர்கள், இயர் பட்ஸ், ஹெட்போன் உள்ளிட்ட ஆடியோ சாதனங்களை ஹேக் செய்து, உங்களின் உரையாடல்களை கண்காணிக்கவும், அழைப்புகளை ஹைஜாக் செய்யவும், கால் டேட்டா, கான்டாக்ட்ஸ் உள்ளிட்டவற்றை திருடவும் வாய்ப்புள்ளது. ஆகவே, பொது இடங்களில் புளூடூத் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.

error: Content is protected !!