News March 12, 2025
வீட்டிற்குள் பாம்பு நுழைந்தால் இதை செய்யுங்க..

பாம்புகள் கடுமையான வாசனைக்கு மிகவும் பயப்படும் என விலங்கியல் துறை நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, பாம்பு வீட்டிற்குள் நுழைந்தால் வினிகர் அல்லது மண்ணெண்ணெய் தெளிக்க அவர்கள் அறிவுறுத்துகின்றனர். கூடுதலாக பூண்டு, எலுமிச்சை, இலவங்கப்பட்டை, புதினா ஆகியவற்றை தூவினால் பாம்பு தானாகவே வெளியே ஓடிவிடும். அதேபோல், வெப்பநிலை மாற்றங்களுக்கும் அவை பயப்படும் என்பதால், புகையாலும் விரட்டலாம் என்கின்றனர்.
Similar News
News July 10, 2025
கிருபானந்த வாரியாரின் கொள்ளுப்பேத்தி மரணம்

திருமணமாகி 3 மாதத்தில் உயிரிழந்த சென்னை வழக்கறிஞர் கவிதா குறித்து அடுத்தடுத்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவர் பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியாரின் கொள்ளுப்பேத்தி எனத் தெரியவந்துள்ளது. மாரடைப்பால் கவிதா உயிரிழந்ததாக கணவன் வீட்டார் கூறிய நிலையில், தனது மகள் மரணத்திற்கு வரதட்சணை கொடுமையே காரணம் என கவிதாவின் தந்தை குற்றஞ்சாட்டியுள்ளார்.
News July 10, 2025
டீசரும் கிடையாது, டிரெய்லரும் கிடையாது.. கூலி புரமோஷன்?

கூலி படத்தில் இருந்து ‘Monica’ என்ற 2-வது பாடல் இன்று மாலை வெளியாகிறது. ஆக.14-ல் படமும் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில், படத்தின் டீசர், டிரெய்லர் ஏதும் வெளியிடாமல், புதுவித புரோமோஷன் செய்யும் பணிகளில் தயாரிப்பு நிறுவனம் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், இம்மாத இறுதியில் படத்தின் ஆடியோ லாஞ்ச் நடைபெறவுள்ளது. லோகேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
News July 10, 2025
தமிழகத்தில் 1,996 ஆசிரியர் பணியிடங்கள்: TRB

முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை 1 & கணினி பயிற்றுநர் நிலை 1 ஆகிய பிரிவுகளில் காலியாக உள்ள 1,996 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியிட்டுள்ளது. இதற்கான தேர்வு செப்.28 முதல் நடைபெறவுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆக.12. மேலும் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க இங்கே <