News January 1, 2025
ரிலீஸ் தேதியுடன் வந்த இட்லி கடை ஃபர்ஸ்ட் லுக்

தனுஷ் இயக்குனராகவும் தடம் பதித்து வருகிறார். பா.பாண்டி, ராயன் படங்களை தொடர்ந்து, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இட்லி கடை ஆகிய படங்களையும் இயக்கி வருகிறார். புத்தாண்டை முன்னிட்டு இட்லி கடை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்துள்ளது. ராஜ்கிரணுடன் இளைஞராக ஒரு லுக், நடுத்தர வயதில் ஒரு லுக் என தனுஷ் சிறப்பாக இருக்கிறார். படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 10 என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Similar News
News October 18, 2025
தீபாவளிக்கு சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்

தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் தங்களின் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர். இதற்காக சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், கடந்த 2 நாள்களில் 6,920 அரசு பஸ்களில் 3,59,840 பேர் பயணித்துள்ளனர் என்று அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் மோகன் தெரிவித்துள்ளார். மேலும், இன்றும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
News October 18, 2025
DUDE ஓடிடி ரிலீஸ் தேதி இதுவா?

பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு நடிப்பில் உருவாகியுள்ள ’டியூட்’ திரைப்படம் நேற்று (அக்.17) வெளியானது. முதல் பாதி நன்றாக இருப்பதாகவும், ஆனால் 2-ம் பாதி எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என கலவையான விமர்சனங்கள் வருகின்றன. இந்நிலையில் இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் கசிந்துள்ளது. அதன்படி, ‘டியூட்’ திரைப்படம் நவ.14-ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.
News October 18, 2025
சற்றுமுன்: அதிமுகவில் இணைந்தனர்

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ளதால், திமுக, அதிமுக மாற்றுக்கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில், விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலையில் திமுக, விசிக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி, 100-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து, அதிமுக உறுப்பினர் அட்டையை CVS வழங்கினார்.