News September 9, 2025

ஐசியு Vs வெண்டிலேட்டர்: ஹாஸ்பிடலாகும் அரசியல் களம்

image

தமிழக அரசியல் களத்தில் DCM உதயநிதி, EPS, அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் வைத்த விமர்சனங்கள் பேசுபொருளாகியுள்ளது. அதிமுக விரைவில் ஐசியுவில் அனுமதிக்கப்படும் என DCM உதயநிதி விமர்சித்திருந்தார். இதற்கு, 2026-ல் திமுகவை வென்டிலேட்டரில் வைத்து ஆம்புலன்ஸில் அனுப்பிவைக்கப்படும் என EPS பதிலடி கொடுத்தார். இதனிடையே, அதிமுக கோமா நிலையில் உள்ளதாக சேகர்பாபு தனது பங்கிற்கு தனது கருத்தை கூறியுள்ளார். உங்கள் கருத்து?

Similar News

News March 11, 2026

வங்கியில் 1,300 பணியிடங்கள்.. Apply பண்ணுங்க

image

IDBI வங்கியில் காலியாக உள்ள 1,300 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூனியர் அசிஸ்டண்ட் மேனேஜர், அசிஸ்டண்ட் மேனேஜர் பணிகளுக்கு ஏதேனும் ஒரு டிகிரி, 2 ஆண்டு பணி அனுபவம் தேவை. எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் ஆள்கள் தேர்வு செய்யப்படுவர். ஆண்டுக்கு சம்பளமாக ₹6.14 லட்சம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் 19-ம் தேதிக்குள் இந்த <>லிங்க்கில்<<>> விண்ணப்பிக்கவும்.

News March 11, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶மார்ச் 11, மாசி 27 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: அஷ்டமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்

News March 11, 2026

ஈரானின் கண்ணிவெடியால் டிரம்ப் ஆவேசம்!

image

<<19350594>>ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகள் <<>>வைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை அடுத்து ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கடற்படை கண்ணிவெடிகளை வைத்திருந்தால், அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்; இல்லையெனில், இதற்கு முன் கண்டிராத அளவில் இராணுவ நடவடிக்கை இருக்கும் என்று கூறியுள்ளார். அந்த கண்ணிவெடிகளை அகற்றினால், ஈரான் சரியான திசையில் நகரும் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!