News January 4, 2026

ICU-வில் இயக்குநர் பாரதிராஜா

image

மூச்சுத்திணறல் காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட இயக்குநர் பாரதிராஜாவுக்கு ICU-வில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே அவர் இறந்துவிட்டதாக SM-ல் தகவல் பரவியது. ஆனால் பாரதிராஜா நலமுடன் இருப்பதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவரது குடும்பத்தினர் அறிக்கையின் மூலம் விளக்கம் அளித்துள்ளனர். அதேபோல், பாரதிராஜாவின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் ஹாஸ்பிடல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News

News February 5, 2026

வங்கி கடன் தள்ளுபடி.. மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி

image

தேர்தலையொட்டி, கூட்டுறவு வங்கிகளில் <<19053905>>கடன் தள்ளுபடி<<>> உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை EPS வெளியிட்டுள்ளார். இதனிடையே, தள்ளுபடி கிடைக்குமென எதிர்பார்த்து கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 2025 ஏப்ரல் – டிசம்பர் வரை ₹11,000 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். திமுக தரப்பிலும் கடன் தள்ளுபடி தொடர்பான தேர்தல் வாக்குறுதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

News February 5, 2026

PM மோடி உரை.. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

image

ராஜ்யசபாவில் PM மோடி உரையின் போது முழக்கமிட்ட காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சி MP-க்கள் வெளிநடப்பு செய்தனர். குடியரசு தலைவர் உரைக்கு மோடி பதிலளித்து வருகிறார். அப்போது, அவரை எதிர்த்து முழக்கமிட்ட கார்கேவிடம், இருக்கையில் அமர்ந்து முழக்கமிடுமாறு மோடி கோரிக்கை விடுத்தார். மேலும், மக்கள் நலனே பிரதானம் என பாஜக கருதுவதால்தான், 3-வது முறையாக ஆட்சி பொறுப்பேற்று செயல்பட்டு வருவதாகவும் மோடி தெரிவித்தார்.

News February 5, 2026

சபாநாயகருக்கு பின்னால் மோடி ஒளிகிறார்: பிரியங்கா

image

3 பெண் MP-க்கள், PM இருக்கைக்கு முன்னால் நின்றுகொண்டிருந்ததால், அவைக்கு வர மோடிக்கு துணிச்சல் இல்லை என பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். அவைக்கு வராமல் சபாநாயகருக்கு பின்னால் <<19058063>>PM மோடி<<>> ஒளிந்துகொள்கிறார், இது என்ன முட்டாள்தனம் என்றும், பாஜக அரசு விவாதம் நடத்தவே விரும்பவில்லை எனவும் கூறியுள்ளார். முன்னதாக சுதா, ஜோதிமணி உள்ளிட்டோர் PM-ஐ முற்றுகையிட இருந்ததாக ஓம்பிர்லா சூசகமாக கூறியிருந்தார்.

error: Content is protected !!