News July 1, 2024
விஷச்சாராயம் தொடர்பாக ஐகோர்ட் விசாரணை

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. MM.சுப்ரமணியம், குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கினை இன்று விசாரித்தது. அப்போது, தலைமை செயலர், டிஜிபி, சேலம் & கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், கல்வராயன் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசுக்கு வலியுறுத்தினர்.
Similar News
News November 18, 2025
டிரம்ப்பின் காஸா அமைதி திட்டத்திற்கு ஐநா ஒப்புதல்

டிரம்ப்பின் காஸா அமைதி திட்டத்திற்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, காஸாவில் மோதலை தடுக்க சர்வதேச படைகள் நிறுத்தப்படும். மறுகட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், சர்வதேச நாடுகளின் படைகள் நிறுத்தப்படுவது, இஸ்ரேலுக்கு ஆதரவாக அமையக்கூடும் என ஹமாஸ் எதிர்ப்பு இதற்கு தெரிவித்துள்ளது.

DMK வெற்றிக்கு காங்., முக்கிய காரணம்: செல்வப்பெருந்தகை

பிஹார் தேர்தல் முடிவுகள் எந்த விதத்திலும் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். திமுக தங்களை மதிக்கவில்லை என்றும் தங்களுடன் ஒத்துப்போகவில்லை எனவும் காங்., நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இதுகுறித்து டெல்லி தலைமைக்கு எடுத்துக்கூறி பிரச்னையை சரி செய்வோம் எனக் கூறிய அவர், திமுக வெற்றி பெறுவதற்கு காங்., வாக்குகள் மிக முக்கிய காரணமாக உள்ளது என்றார்.