News September 20, 2025
முத்திரை பதித்த வில்லன்கள்

சினிமாவில் வில்லன் இல்லை என்றால் த்ரில்லும் சுவாரசியமும் இருக்காது. வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த சில நடிகர்கள், நாயகனுக்கு நிகராக கொண்டாடப்படுகின்றனர். அவர்கள், தமிழ் சினிமாவில் தங்களுக்கு என்று ஒரு முத்திரை பதித்துள்ளனர். அவர்களில் சிறந்த சிலரின் போட்டோக்களை மேலே கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. உங்களுக்கு பிடித்த வில்லன் யாருன்னு கமெண்ட்ல சொல்லுங்க.
Similar News
News September 20, 2025
விஜய்க்கு பேனா கொடுத்த இயேசு: PHOTO

தனது 2-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை இன்று நாகை, திருவாரூரில் விஜய் மேற்கொள்கிறார். அவரை வரவேற்கும் விதமாக பேனர்கள், வழிநெடுகிலும் தவெக கொடிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், CM நாற்காலியில் அமர்ந்திருக்கும் விஜய்க்கு, ஜீசஸ் பேனா கொடுப்பது போன்ற போட்டோ ஃப்ரேமை தொண்டர்கள் கையில் ஏந்தியுள்ளது கவனம் பெற்றுள்ளது. அதில், ‘விஜய் அண்ணா, இயேசு எப்பொழுதும் உங்களுடன் இருக்கிறார்’ என்றும் இடம்பெற்றுள்ளது.
News September 20, 2025
மாணவர்கள் அன்பா சொன்னா புரிஞ்சுப்பாங்க: CM

பள்ளிக்கல்வித் துறை சார்பில், ₹277 கோடி மதிப்பீட்டில் 243 புதிய பள்ளி கட்டடங்களுக்கு CM ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அப்போது ஆசியர்கள் முன் பேசிய அவர், மாணவர்களுக்கு சாதிய உணர்வு, பாலின பாகுபாடு எண்ணங்கள் வராமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்காமல் அன்பாக கூறினால் புரிந்துக் கொள்வார்கள் எனவும் கூறினார்.
News September 20, 2025
விஜய்யின் தனி விமானத்தின் விலை என்ன தெரியுமா?

தொலைதூர சினிமா ஷூட்டிங் ஸ்பாட்களுக்கு தனி விமானத்தில் சென்று கொண்டிருந்தார் விஜய். இந்நிலையில், தேர்தல் பிரசாரத்திற்காகவும், குறிப்பிட்ட இடத்திற்கு செல்லும்போது, அருகிலுள்ள ஏர்போர்ட்டுக்கும் தனி விமானம் மூலமே செல்கிறார். இதன் விலை ₹8 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. அத்துடன், ஒருமுறை இந்த விமானத்தில் பயணிக்க ₹14 லட்சம் வரை செலவாவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.